Anti - Indian கருத்துகள் பதிவு; 8 Youtube சேனல்கள் முடக்கம் - மத்திர அரசு அதிரடி

முடக்கப்பட்ட பட்டியலில் யூடியூப் சேனல்களுடன் ஒரு ஃபேஸ்புக் பக்கமும் அடங்கும். கடந்த டிசம்பர் மாதம் முதல் இப்போது வரை 102 சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Blocked
BlockedTwitter
Published on

ஆன்டி - இந்திய கருத்துகளும், பொய்யான செய்திகளும் கூறியதாக 8 யூடியூப் சேனல்களை முடக்கியிருக்கிறது மத்திய அரசு.

இவற்றில் 7 சேனல்கள் இந்தியாவிலிருந்தும் 1 சேனல் பாகிஸ்தானிலிருந்தும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த சேனல்கள் முடக்கப்பட்டதாக இன்று வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் யூடியூப் சேனல்களுடன் ஒரு ஃபேஸ்புக் பக்கமும் அடங்கும். கடந்த டிசம்பர் மாதம் முதல் இப்போது வரை 102 சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முடக்கப்பட்ட Youtube சேனல்கள்

இந்த யூடியூப் சேனல்கள் "பொய்யான தகவல்களைக் கொண்டு, மத ரீதியாக சமூகங்களுக்கு இடையில் வெறுப்பைத் தூண்டியது" என தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிடுக்கிறது.

இந்த சேனல்களுக்கு 86 லட்சம் சப்ஸ்கிரைபர்களும் 114 கோடி பார்வையாளர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

"இந்திய அரசு மத பண்டிகைகளை தடை செய்யவும், மத போரை பிரகடனம் செய்யவும் மத கட்டமைப்புகளை இடிக்கிறது" போன்ற பொய்யான கருத்துகள் அந்த யூடியூப் சேனல்களில் இருந்ததாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Blocked
6800 கோடி, 6,83,900 வேலைவாய்ப்புகள் - Youtube இந்திய பொருளாதாரத்தில் செலுத்திய தாக்கம்

அந்த யூடுயூப் சேனல்கள் சர்ச்சைக்குரிய படங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் சின்னங்களை Thumbnail -ல் பயன்படுத்தியதாக அரசு சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபலமான செய்தியாளர்களின் படங்களை தவறாக உபயோகித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக சில படங்களையும் வெளியிட்டிருக்கிறது அமைச்சகம்.

அறிக்கை

கடந்த ஏப்ரல் மாதம் 22 சேனல்கள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Blocked
38 Youtube சேனல்களை முடக்கிய மத்திய அரசு - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com