இந்தியா: 826 பழங்கால செப்பு நாணயங்கள் கண்டுபிடிப்பு - எந்த ஊரில்?

சக தொழிலாளர்களுடன் முந்திரி தோப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு மண் பானையில் நாணயங்கள் இருப்பதை பார்த்தேன், மொத்தம் இருந்த 826 நாணயங்களை சுத்தம் செய்து அதிகாரியிடம் ஒப்படைத்தேன் என்றார் விஷ்ணு ஜோஷி.
பழங்கால 826 செப்பு நாணயங்கள் இந்தியாவில் கண்டுபிடிப்பு - எங்கே?
பழங்கால 826 செப்பு நாணயங்கள் இந்தியாவில் கண்டுபிடிப்பு - எங்கே?Twitter

கோவாவில் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று அடையாளம் தெரியாத 826 செப்புக் காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவா தொல்லியல் துறை, செப்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது உள்ளூர் மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

கோவாவின் சத்தாரி என்ற இடத்தில் உள்ள முந்திரி தோட்டத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த விஷ்ணு ஜோஷி என்பவர் கண்களில் தான் இந்த செப்புக் காசுகள் தென்பட்டுள்ளது.

தொல்லியல் துறை அமைச்சர் சுபாஷ் பால்தேசாயிடம் இந்த காசுகள் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து விஷ்ணு ஜோஷி கூறுகையில்

சக தொழிலாளர்களுடன் முந்திரி தோப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு மண் பானையில் நாணயங்கள் இருப்பதை பார்த்தேன்,

மொத்தம் இருந்த 826 நாணயங்களை சுத்தம் செய்து அதிகாரியிடம் ஒப்படைத்தேன் என்றார்.

பழங்கால 826 செப்பு நாணயங்கள் இந்தியாவில் கண்டுபிடிப்பு - எங்கே?
கோவா: சிறைச் சாலையில் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் - சிறப்புகள் என்ன?

இதுப் பற்றி அதிகாரி பால்தேசாய் குறிப்பிடுகையில்,

நாணயங்களை ஒப்படைத்த ஜோஷிக்கு வெகுமதி வழங்குவதன் முக்கியத்துவத்தை அவர் கூறினார்.

நாணயங்களின் தோற்றம் மற்றும் வரலாற்றுச் சூழலை ஆராய வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்று கூடும் என்று பால்தேசாய் உறுதியளித்தார்.

நிபுணர்கள் குழு ,விரிவான விசாரணைக்கு தயாராகி வரும் நிலையில், இந்த பழங்கால செப்பு நாணயங்களின் மர்மங்களை இந்த ஆராய்ச்சி அவிழ்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழங்கால 826 செப்பு நாணயங்கள் இந்தியாவில் கண்டுபிடிப்பு - எங்கே?
கோவாவின் மறுபக்கம்: கடற்கரை நகரத்தில் பார்க்க வேண்டிய 5 கோயில்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com