அரிய நோயால் பாதிக்கப்பட்ட தெரு நாய் - காப்பாற்ற ஒரு ஊரே கூடிய நெகிழ்ச்சி சம்பவம்

முத்துமணிக்கு சிகிச்சை சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது அந்த மருத்துவமனையில் கிராம மக்கள், கால்நடை மருத்துவர் முதல் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வரை அனைவரும் கூடியிருந்தனர்.
முத்துமணி
முத்துமணிTwitter
Published on

கேரள மாநிலம், கசரகாட் மாவட்டம், சுல்லிகரா கிராம மக்கள் அனைவரும் இப்போது ஒரு தெரு நாய்க்காக காத்திருக்கின்றனர்.

அதன் பெயர் முத்துமணி. அந்த பகுதி மக்கள் அனைவருக்கும் முத்துமணியை நன்றாக தெரியும். அந்த கிராம மக்கள் எல்லோருடனும் அந்த நாய்க்கு ஒரு பிணைப்பு உள்ளது.

இப்போது முத்துமணி பத்திரமாக மீண்டு வர வேண்டும் என்பது தான் அந்த கிராம மக்களின் வேண்டுதல்.

முத்துமணி அந்த கிராமத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திரிகரிப்பூர் அரசு கால்நடை மருத்துவமனையில் தன் மார்பகத்தில் இருக்கும் 5 கிலோ கட்டியை எடுக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டாள்.

முத்துமணிக்கு சிகிச்சை சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது அந்த மருத்துவமனையில் கிராம மக்கள், கால்நடை மருத்துவர் முதல் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வரை அனைவரும் கூடியிருந்தனர்.

இவ்வளவு அக்கறை காட்டும் அளவிற்கு அந்த நாயின் மீது என்ன பாசம் இந்த மக்களுக்கு?

முத்துமணி நாளெல்லாம் கிராமத்து தெருக்களில் சுற்றித் திரிவாள். அங்குள்ள ஆட்டோகாரர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் அவள் செல்லம்.

ஒவ்வொரு ஆண்டும் முத்துமணி குழந்தைகள் பெற்றெடுக்கும் போது கிராம மக்கள் தங்கள் வீட்டுக்கு அந்த நாய்க்குட்டிகளை தூக்கிச் சென்று வளர்க்கிறார்கள். சுல்லிகராவில் இருக்கும் வீட்டு நாய்களில் முத்துமணியின் குழந்தைகள் தான் கணிசமான அளவு எனலாம்.

முத்துமணி தெருக்களில் சோர்ந்து படுத்திருந்தபோது அதன் மார்பில் கட்டியிருப்பதைப் பார்த்திருக்கிறார் ராஜு என்ற கிராமவாசி. ஒரு வாரத்தில் அந்த கட்டி பெரிதாக வளர்ந்தது.

இதனால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அதனை அழைத்து சென்றனர். அங்கு ஊசியை வைத்து அந்த கட்டியை மருத்துவர் உறிஞ்சி எடுத்தார். ஆனால், ஒரு வாரத்தில் கட்டி திரும்ப வந்தது.

முத்துமணியின் நோய் தாக்கம் தீவிரமானது என்பதை கிராம மக்கள் புரிந்துகொண்டனர்.

முத்துமணி
Tender: செல்ல பிராணிகளுக்கான டேட்டிங் ஆப் - அசத்தும் அமெரிக்க காவல்துறை

ரவீந்திரன் கொட்டோடி என்ற கிராமவாசி முரளிதரன் என்ற மூத்த கால்நடை மருத்துவரை அழைக்கும் யோசனையைச் சொல்ல கிராம மக்கள் அவரை சந்தித்தனர்.

"கிராம மக்கள் அனைவரும் இணைந்து பணம் திரட்டித் தருவதாக இருந்தால் முத்துமணிக்கு மேல் சிகிச்சை அளிக்க முடியும்" எனக் கூறியிருக்கிறார் மருத்துவர் முரளிதரன்.

கிராம மக்கள் முத்துமணிக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். இதற்காக பஞ்சாயத்து தலைவர் பேபி பாலகிருஷ்ணனிடம் உதவி கோரியிருக்கின்றனர்.

அவர், திரிகரிப்பூர் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையத்தை அனுகினார். அங்கிருந்து ஒரு வண்டி வந்து முத்துமணியை சிகிச்சைக்காக ஏற்றிச் சென்றது.

மாவட்டத்திலேயே சிறந்த கால்நடை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்.ஃபேபின் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்தார்.

முத்துமணி
நாய் வளர்க்குறீங்களா? இந்த 10 விஷயத்தைக் கண்டிப்பாக தெரிஞ்சுக்கங்க

இப்போது மருத்துவர் முரளிதரன் கூறியிருப்பதன் படி, முத்துமணி குணமடைந்து விட்டாள். அவளுக்கு கட்டி இருந்ததால் முதுகு தண்டு பலவீனமடைந்திருக்கிறது. முழுவதும் குணமாகி அவள் வீட்டுத் திரும்புவாள்.

முத்துமணியை வரவேற்க கிராமமக்கள் தயாராக காத்திருக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்களுக்குள் அவள் தனது சொந்த கிராமத்தைச் சென்று சேருவாள்.

முத்துமணி
மனைவியை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு எடுத்து சென்ற கணவர் - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com