வடமாநில பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று குல்லு, சிம்லா, உத்தராகண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழையுடன் கூடிய பனிப்பொழிவு இருந்தது.
இதனால் இமாச்சல பிரதேசத்தில் முக்கிய சாலைகள் சில மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் மற்றொரு பக்கம் பொது மக்களும் சுற்றுலா பயணிகளும் ஸ்னோ ஃபாலை எஞ்சாய் செய்து வருகின்றனர்.
அடுத்த சில நாட்களுக்கு பனிப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. மேலும், மக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும் எச்சரித்துள்ளது.
இந்தியாவிலுள்ள நான்கு புனித தலங்களான சார் தாம் கோவில்களில் ஒன்று கேதார்நாத் கோவில். உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் என்கிற இடத்தில் இந்த ஆலயமானது அமைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உலகளவிலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது இக்கோவில்.
கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் செவ்வாய் அன்று பக்தர்களுக்காக கோவில் திறக்கப்பட்டது. எனினும் உத்தராகண்ட் அரசு பனிப்பொழிவு எச்சரிக்கையின் காரணமாக தற்போது புனித யாத்திரைக்கான முன்பதிவுகளை மட்டும் நிறுத்தி வைத்துள்ளது.
யாத்திரை செல்லும் மார்க்கத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர். புனித யாத்திரை செல்லும் வழியில் மூன்று முதல் நான்கு அடிக்கு பனிப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை மாநில அரசு வெளியிட்டிருந்தது. அதில்,
“கேதார்காட்டி பகுதியில் இந்த வாரம் முழுவதுமே மோசமான வானிலை தொடரும் என்பதனால் மாநில அரசு அடுத்த சில நாட்களுக்கு முன்பதிவுகளை நிறுத்தியுள்ளது. கடும் பனிபொழிவு, கேதார்நாத் நிர்வாகத்திற்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது” என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அட்சய திரிதியையை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமையன்று ஒரு பகுதி பக்தர்கள் யாத்திரைக்காக புறப்பட்டது. சார் தாம்களில் ஒன்றான யமுனோத்ரியில் தொடங்கி இவர்கள் ஹரித்வார் வரை செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது யாத்திரைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் சற்றே ஏமாற்றத்தில் உள்ளனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust