அகோரிகள் இறந்த உடலுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வர்களா? - விரிவான தகவல்கள்

பெரும்பாலும் அகோரிகள் இந்திய சமுதாயத்தில் கீழ்சாதி எனக் கூறப்படும் சமூகத்திருந்து வந்திருக்கின்றனர். மற்றவர்களுக்கு மனத்தடையாக இருக்கும் விஷயங்களை உடைப்பதன் மூலம் மேம்பட்ட நிலையை அடைய முடியும் என அவர்கள் நினைக்கின்றனர்.
அகோரிகள் இறந்த உடலுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வர்களா? - விரிவான தகவல்கள்
அகோரிகள் இறந்த உடலுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வர்களா? - விரிவான தகவல்கள்Aghori / Canva
Published on

வட இந்தியாவில் குறிப்பாக வாரணாசியில் அகோரிகள் இருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நான் கடவுள் படத்தின் மூலமாக தான் நம்மில் பலருக்கும் அகோரிகள் பற்றித் தெரிய வந்திருக்கிறது.

உண்மையில் அகோரிகளின் வாழ்க்கை எப்படியிருக்கும்? பிணங்களை எரிக்கும் இடத்தில் கண்விழித்து அங்கேயே உண்டு உறங்கி வாழ்வது இவர்களுக்கு எப்படி சாத்தியமாகிறது?

எதைப் பற்றியும் கவலை இல்லாமல் கஞ்சா புகைத்துவிட்டு, மனித மாமிசத்தை உண்டுவிட்டு மண்டை ஓடுகளுடன் திரியும் இவர்கள் தான் அகோரிகள்.

சமஸ்கிருதத்தில் அகோரி என்றால் பயமில்லாத என்று பொருள். இவர்களுக்கு உலகில் வாழும் சாமானியர்கள் கவலைக்கொள்ளும் எதைப்பற்றியும் அக்கறை கிடையாது. அவர்களது நோக்கம் ஆன்மிக ஞானத்தை அடைந்து கடவுளுடன் இணைந்து இருப்பது மட்டுமே.

இவர்கள் செய்யும் விநோதமான செயல்கள் யாவும் அதற்கான வழியாகவே நினைக்கின்றனர். மனித மாமிசத்தையும் விலங்கு மாமிசத்தையும் எந்த வேறுபாடும் காட்டாமல் ஒரேப் போல சாப்பிடுகின்றனர். சிலர் தங்களது மலத்தை உண்கின்றனர்.

சராசரியான நல்லது, கெட்டதுகளில் இவர்களுக்கு உடன்பாடு இல்லை. மற்றவர்களுக்கு மனத்தடையாக இருக்கும் விஷயங்களை உடைப்பதன் மூலம் மேம்பட்ட நிலையை அடைய முடியும் என அவர்கள் நினைக்கின்றனர்.

பெரும்பாலான அகோரிகள் இந்திய சமுதாயத்தில் கீழ்சாதி எனக் கூறப்படும் சமூகத்திருந்து வந்திருக்கின்றனர்.

அகோரிகளின் வரலாறு குறித்து லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர் ஜேம்ஸ் மலின்சன் என்பவர் பிபிசி வலைத்தளத்துக்கு சில தகவல்களை அளித்துள்ளார்.

அகோரி என்ற வார்த்தை 18ம் நூற்றாண்டில் தான் பரவால்லக்கப்பட்டுள்ளது. அகோரிகளின் பழக்க வழக்கங்கள் 7ம் நூற்றாண்டில் ஆவணப்படுத்தப்பட்ட கபாலிக துறவிகளின் நடவடிக்கையை ஒத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


பொதுவாக ஆன்மிக துறவிகள், சாமியார்களுக்கென ஒரு அமைப்பு அல்லது நிர்வாகம் இருக்கும். ஆனால் அகோரிகளுக்கு அப்படி எந்த கூட்டமைப்பும் கிடையாது அவர்கள் தனிமரமாகவே வாழ்க்கையை நடத்துகின்றனர்.

அவர்களது குடும்பத்தினருடன் துளியும் தொடர்பற்று இருப்பார்கள். வெளி ஆட்களை எளிதில் நம்பிவிட மாட்டார்கள் அதே நேரத்தில் யாரையும் வெறுக்கவும் மாட்டார்கள்.

இயற்கையோடு இணைந்து எளிமையாக வாழ்வது தான் அகோரி வாழ்வு. மனித உடலோ, விலங்கு மாமிசமோ எது கிடைக்கிறதோ உண்பர்.

அகோரிகள் இறந்த உடலுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வர்களா? - விரிவான தகவல்கள்
தாய்லாந்து விநோதம்: இவரது சிறுநீர் நோய்களை குணமாக்குமென மக்கள் நம்புகின்றனர் - யார் இவர்?

வருடத்தில் பெரும்பாலான நாட்களில் சுற்றித்திரிந்து கழிக்கும் அகோரிகள் கும்பமேளா தருணத்தில் வாரணாசியில் கூடுவர். அப்போது கங்கையில் குளிக்கவரும் பலரும் தங்களை அகோரிகளைப் போல காட்டிக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.

அகோரிகள் பெரும்பாலும் அறிவுக்கூர்மை பெற்றவர்களாக இருப்பர். ஏதோ ஒரு விஷயத்தில் முழுமையான ஞானம் பெற்றிருப்பர்.

நேபாள மன்னருக்கு ஒரு அகோரி ஆலோசகராக இருந்ததாக கூறப்படுகிறது. அகோரிகள் அழிக்கும் கடவுளான சிவன் மற்றும் அவரது துணையன சக்தியை வணங்குகின்றனர்.

அகோரிகளின் வாழ்க்கை முறை கடந்த தசாப்தங்களில் பல மாற்றங்களுக்கு உட்பட்டுவிட்டது.


வாரணாசியில் அகோரிகள் தொழுநோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். குடும்பத்தினரால் கூட துறத்திவிடப்பட்ட தொழுநோயாளர்களை அகோரிகள் கவனித்து வருகின்றனர்.

சில அகோரிகள் செல்ஃபோனை பயன்படுத்துகின்றனர். பொது இடங்களில் ஆடைகள் அணியத் தொடங்கிவிட்டனர். பொது போக்குவரத்தை உபயோகிக்கின்றனர்.

அகோரிகள் எப்போதும் தனியாகவே இருக்கின்றனர். சிலர் இறந்த உடலுடன் உடலுறவு வைத்துக்கொள்வதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

சில நேரம் பாலியல் தொழிலாளர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்கின்றனர். ஆனால் ஒரு துணையை, பாலியல் உறவை வைத்துக்கொள்வதில்லை.

அகோரிகள் இறந்த உடலுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வர்களா? - விரிவான தகவல்கள்
பத்து வருடங்களாக ஒரு கையை தூக்கியப்படியே வாழும் சாமியார் - கூறும் விநோத காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com