அக்னிபத் : "எனக்கு 15 ஆண்டுகளாக வேலையில்லை" - ஆனந்த் மகிந்திராவுக்கு ராணுவ வீரர் பதில்

அக்னிபத் திட்டத்துக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில் அதற்கு ஆதரவாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் ஒரு பதிவினை வெளியிட்டார்.
Anand Mahindra and Army Man
Anand Mahindra and Army ManTwitter
Published on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு அக்னிபாத் எனும் திட்டத்தை அறிவித்தது. அதில் இளைஞர்கள் சேர வேண்டும் என அழைப்பு விடுத்தது. ஆனால் இந்த திட்டம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. இந்தியா முழுவதும் இளைஞர்கள் இந்த திட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் ரயில்கள் கொழுத்தப்பட்டு வன்முறையும் உருவானது.

அக்னிபத் திட்டத்தில் பணியாற்றுவதனால் தங்களது எதிர்காலம் கேள்விக் குறியாகும் எனக் கூறும் இளைஞர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த சலுகையும் இல்லாததால் அந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு அடுத்தகட்ட வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அரசு சார்பில் கூறப்பட்டாலும் அதில் இளைஞர்கள் நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றனர்.

கடந்த ஜூன் 14ம் தேதி அறிவிக்கப்பட்ட அக்னிபாத் திட்டம் 17 வயது இளைஞர்களை துணை இராணுவம் தொடர்பான வேலைகளில் சேர அழைக்கிறது. அவர்களுக்கு 21 வயது வரை பயிற்சியும் வேலையும் வழங்கப்படும். அதிலிருந்து 25% பேர் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து 15 ஆண்டுகள் பணியில் சேர்க்கப்படுவர்.

Indian army
Indian armyPexels

அக்னிபத் திட்டத்துக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில் அதற்கு ஆதரவாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் ஒரு பதிவினை வெளியிட்டார்.

அதன் பிறகு, சந்தீப் குமார் என்ற பெயருடைய ட்விட்டர் பயனர், "அக்னிவீர்களுக்கு மகிந்திரா நிறுவனத்தில் என்ன வேலைகள் வழங்கப்படும்?" எனக் கேட்டதனை ரீட்விட் செய்த ஆனந்த் மகிந்திரா, கார்ப்பரேட் துறையில் அக்னிவீரர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், நிர்வாகம் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை வரை அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறினார்.

Anand Mahindra and Army Man
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் சந்தால் ஆதிக்குடிகள் சமூகம் குறித்து தெரியுமா?

ஆனந்த் மகிந்திராவின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த முன்னாள் இராணுவ வீரராக கருதப்படும் ப்ரவீன் குமார் தியோத்தியா என்பவர், "15 வருட இராணுவ சேவைக்கு பிறகு நான் இன்றும் வேலையில்லாமல் இருக்கிறேன். இத்தனைக்கும் 26/11 தீவிரவாத தாக்குதலில் கௌதம் அதானி உட்பட 185 உயிர்களை நான் காத்திருக்கிறேன். எனக்கு உங்கள் குழுமத்தில் என்ன பணி வழங்கப்படும்? இது போல பலர் 15 ஆண்டுகள் சேவைக்கு பிறகு வேலையில்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

Anand Mahindra and Army Man
மகாராஷ்டிரா அரசியல் பரபரப்பு: குடும்பத்துடன் அரசு பங்களாவை காலி செய்த உத்தவ் தாக்ரே

முன்னாள் வீரர் மட்டுமல்ல முன்னாள் கடற்படை அதிகாரியான அருண் பிரகாஷ் என்பவர், "ஏன் புதிய திட்டத்துக்காக காத்திருக்க வேண்டும். ஏற்கெனவே ஒழுக்கமான மற்றும் திறமையான இராணுவ வீரர்கள் (ஜாவான்கள் மற்றும் அதிகாரிகள்) ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் இரண்டாவது பணிக்காக காத்திருக்கின்றனர். உங்கள் குழுமத்தில் இருந்து புள்ளி விவரங்களைப் பார்த்தால் நன்றாக இருக்கும்" எனக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அக்னிபத் திட்டம் குறித்து முழுவதுமாக தெரிந்துகொள்ள இந்த செய்தியைப் படிக்கவும்.

Anand Mahindra and Army Man
அக்னிபாத்: வட மாநிலங்கள் பற்றி எரிவது ஏன்? - முழுமையான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com