அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான அய்மன் அல் ஜவாஹரி கர்நாடகா ஹிஜாப் சர்ச்சையைக் குறித்து பேசியவீடியோ வெளியாகியிருக்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த மாதம் பள்ளிகளில் மாணவர்கள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது. நீதிமன்றம் வரை சென்ற வழக்கில் மாணவர்கள் சீருடையைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. ஹிஜாப் வழக்கு நாடு முழுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன் விவாதங்களைத் தொடங்கி வைத்தது.
தங்கள் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவது தங்கள் உரிமை எனக் கூறும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக அல்கொய்தா அமைப்பின் தலைவர் வீடியோவில் பேசியிருந்தார். அதில் தன் முன் நின்று ஜெய் ஶ்ரீ ராம் எனக் கோஷமிட்ட இந்து அமைப்பினருக்கு எதிராக “அல்லாஹு அக்பர்” என முழங்கிய பெண்ணை அவரது துணிவைப் பாராட்டிப் புகழ்ந்து பேசினார். அத்துடன் இந்தியாவிலிருக்கும் சமதர்மமற்ற சூழலையும், இஸ்லாமியர்கள் மீதான அடக்கு முறையையும் விமர்சித்தார்.
ஒசாமா பின்பலேடன் மறைவுக்குப் பின்னர் அல்கொய்தா அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றவர் அய்மன் அல் ஜவாஹரி. கடந்த 2020ம் ஆண்டு இவர் மறைந்து விட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. அதனை மறுத்த அவர் அவ்வப்போது வீடியோக்களில் பேசிவருகிறார்.
கடைசியாகக் கடந்த நவம்பர் மாதம் 9/11 நிகழ்வின் நினைவு தினத்தில் “மேற்கத்திய நாடுகள் இஸ்லாமியத்துக்கு எதிராகச் செயல்படுகின்றன” எனப் பேசியிருந்தார். இவர் தற்போது ஆப்கானிஸ்தானில் மறைந்திருப்பதாக கூறப்படுவதாக.