ஆண்களை பெண்கள் குச்சியால் துரத்தி துரத்தி அடிக்கும் வினோத திருவிழா - எங்கே?
ஆண்களை பெண்கள் குச்சியால் துரத்தி துரத்தி அடிக்கும் வினோத திருவிழா - எங்கே?twitter

ஆண்களை பெண்கள் குச்சியால் துரத்தி துரத்தி அடிக்கும் வினோத திருவிழா - எங்கே?

பெண்களிடம் அடிவாங்க ஆண்கள் வெட்கப்படுவதில்லை. இது பெண்களுக்கு அவர்களுக்கான உரிமை மற்றும் அதிகாரத்தை கொடுக்கும் நிகழ்வு என்பதை அந்த பகுதி மக்கள் நம்புகின்றனர்.
Published on

இந்தியா பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய நாடு. நாடு முழுவதும் பல விதமான பண்டிகைகள், சடங்குகள் பின்பற்றப்படுகின்றன.

ஒரே பண்டிகையின்போது வெவ்வேறு சடங்குகளும் கூட நாம் மக்கள் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் பெரும்பாலான பண்டிகைகளை ஆண்களே முன்னின்று நடத்துவர்.

பெண்களை முக்கியத்துவம் படுத்தும் விழாக்கள் குறைவு தான்.

அப்படிபட்ட ஒரு திருவிழா தான் இந்த திங்கா கவர். இது ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாவின் பின்னணி என்ன? ஏன் கொண்டாடப்படுகிறது? இந்த பதிவில்...

பெண்மையின் கொண்டாட்டம்

திங்கா கவர் பெண்மையை போற்றும் ஒரு விழா. திங்கா கவரின் முக்கிய நோக்கமே ஏமாற்றுவது தான். அதாவது பெண்கள் பல விதமாக வேடமணிந்து, ஆண்களை ஏமாற்றவேண்டும்.

ஏமாற்றுவது எல்லாம் ஒரு திருவிழாவா என்று கேட்பது தெரிகிறது! இதன் பின்கதை என்ன என்பதை சொல்லுகிறோம்.

இந்த திங்கா கவர் விழாவின்போது பெண்கள் இரவில் ஊர்வலமாக செல்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் கடவுளர்களை போல தான் உடையணிகின்றனர். 16 நாட்கள் நடக்கும் இந்த திங்கா கவர் விழாவில் கடைசி நாள் தான் சிறப்பு.

பின்னணி என்ன?

ஒரு முறை சிவபெருமான், பார்வதி தேவியிடம் விளையாடுவதற்காக ஒரு செருப்புத் தொழிலாளி போல வேடமணிந்து வந்துள்ளார். இதற்கு பழிவாங்க பார்வதி தேவி ஒரு பழங்குடியின பெண் போல வேடமணிந்து சிவபெருமானிடம் விளையாடியுள்ளார்.

இதனால் தான் பெண்கள் இந்த திங்கா கவரின் போது பெண்கள் வேடம் தர்க்கின்றனர்.

மற்றொரு கதையில், பார்வதி தேவி சிவபெருமானின் மனதை கவர வித விதமாக தன்னை அலங்கரித்து கொண்டதாகவும், பார்வதியின் அழகை கண்டு சிவன் அவரை தன்னுடனே கூட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது

திங்கா என்றால் மோசடி எனவும், கவர் என்ற வார்த்தை பார்வதி என்றும் பொருள்படுகிறது

ஆண்களை பெண்கள் குச்சியால் துரத்தி துரத்தி அடிக்கும் வினோத திருவிழா - எங்கே?
ஆண்களுக்கு தெரியாமல் பெண்கள் ரகசியமாக செய்யும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

கவர் என்ற பார்வதியின் சிலை நகரத்தின் பல்வேறு இடங்களில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படுகிறது. வேடமணிந்த பெண்கள் கையில் மூங்கில் குச்சிகளுடன் ஆண்களை துரத்தி துரத்தி அடிக்கின்றனர்.

பெண்களிடம் அடிவாங்க ஆண்கள் வெட்கப்படுவதில்லை. இது பெண்களுக்கு அவர்களுக்கான உரிமை மற்றும் அதிகாரத்தை கொடுக்கும் நிகழ்வு என்பதை அந்த பகுதி மக்கள் நம்புகின்றனர்.

குறிப்பாக திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த திருவிழா தங்களது வாழ்க்கை துணையை தேடிக்கொள்ளவும் உதவுவதாக கூறப்படுகிறது.

திருமணம் ஆகாத பெண்களுடன், கணவனை இழந்த பெண்களும் கூட இந்த திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்

திருமணம் ஆகாத ஆண்கள் பெண்கள் கையால் அடி வாங்கினால், விரைவில் திருமணம் ஆகும் என்று நம்புகிறார்கள்

ஆண்களை பெண்கள் குச்சியால் துரத்தி துரத்தி அடிக்கும் வினோத திருவிழா - எங்கே?
ஆண்களுக்கு அனுமதி இல்லை! அருணாச்சல பிரதேசத்தின் இந்த பெண்கள் விழா பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com