வழக்கறிஞர்களிடமிருந்து லஞ்சம், டிப்ஸ் வாங்குவதற்காக ஆடையில் பேடிஎம் ஸ்கேனருடன் வலம் வந்துள்ளார் டவாலி ஒருவர். இவரை இடைக்கால பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது அலகாபாத் நீதிமன்றம்.
கடந்த வியாழன் அன்று ராஜேந்திரா என்பவர் மீது புகார் அளித்து அலகாபாத் நீதிபதி, தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், தனது டவாலி சீருடையில், பேடிம் ஸ்கேனரை வைத்து, வழக்கறிஞர்களிடம் ராஜேந்திரா பணம் பெற்றுவந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை கண்டறிந்த நீதிபதி அஜித் சிங் , அவரை பிடித்து, அவர் மீது புகாரளித்திருக்கிறார். டவாலி இடுப்பில் கட்டும் பெல்ட்டின் அருகில் இந்த பேடிஎம் QR கோட் ஸ்கேனரை வைத்திருந்தார்.
தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால், இதை அவசர வழக்காக கருதி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், ராஜேந்திரா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.
“கடந்த 29ஆம் தேதியிட்ட நீதிபதி அஜித்தின் கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு, டவாலி மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபணமாகி அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டவாலி ராஜேந்திரா ஆடையில் QR கோட் வைத்து பணம் பெற்ற குற்றத்திற்காக உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டவாலி ராஜேந்திரா, வேறு எந்த வேலையோ, வர்த்தகமோ அல்லது தொழிலிலோ ஈடுபடவில்லை என சான்றிதழ் சமர்பிக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டவாலி அந்த சான்றிதழை சமர்ப்பித்தால் தான் அவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust