ஆனந்த் அம்பானியின் 18 கோடி மதிப்புள்ள வாட்ச் தான் உலகிலேயே விலை உயர்ந்ததா? உண்மை என்ன?

சமீபத்தில் ஆனந்த் அம்பானி ஒரு விலையுர்ந்த அரிய கடிகாரத்தை அணிந்திருந்தார். இந்த கடிகாரம் நாடு முழுவதும் உள்ள வாட்ச் பிரியர்களால் கவனிக்கப்பட்டது. ஆனந்த் அம்பானியின் ரூ.18 கோடி மதிப்புள்ள படேக் பிலிப் கிராண்ட்மாஸ்டர் சைம் உலகின் மிக விலையுயர்ந்த கடிகாரம் என்று இணையத்தில் பல அறிக்கைகள் கூறுகின்றன.
Anant Ambani’s Rs 18 crore watch most expensive in the world? Here’s the truth
Anant Ambani’s Rs 18 crore watch most expensive in the world? Here’s the truth Twitter

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி.

உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றான ரூ.15,000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியாவில் வசிக்கும் ஆனந்த் அம்பானி, கவர்ச்சியான கார்கள் மற்றும் அவரின் ஆடம்பர வாழ்கைக்காகவே கவனிக்கப்படுபவர்.

சமீபத்தில் ஆனந்த் அம்பானி ஒரு விலையுர்ந்த அரிய கடிகாரத்தை அணிந்திருந்தார். இந்த கடிகாரம் நாடு முழுவதும் உள்ள வாட்ச் பிரியர்களால் கவனிக்கப்பட்டது.

ஆனந்த் அம்பானியின் ரூ.18 கோடி மதிப்புள்ள படேக் பிலிப் கிராண்ட்மாஸ்டர் சைம் உலகின் மிக விலையுயர்ந்த கடிகாரம் என்று இணையத்தில் பல அறிக்கைகள் கூறுகின்றன.

படேக் பிலிப் என்ற வாட்ச் நிறுவனத்திற்கு சொந்தமான படேக் பிலிப் கிராண்ட்மாஸ்டர் சைம் கடிகாரத்தை தான் ஆனந்த் அம்பானி கட்டியிருந்தார். இது தான் உலகிலேயே மிகவும் விலையுர்ந்த வாட்ச் என்று கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல.

Anant Ambani’s Rs 18 crore watch most expensive in the world? Here’s the truth
Ambani : தந்தை வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்றிய முகேஷ் அம்பானி - மதிப்பு என்ன தெரியுமா?

கிராஃப் டயமண்ட்ஸ் ஹலுசினேஷன் தான் உலகின் மிக விலையுயர்ந்த கடிகாரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.458 கோடியாகும்.

படேக் பிலிப் கிராண்ட்மாஸ்டர் சைம் என்பது கடிகார நிறுவனமான படேக் பிலிப் தயாரித்த அரிய கடிகாரமாகும். இது ஆனந்த் அம்பானியின் விருப்பமான வாட்ச் நிறுவனங்களில் ஒன்றாகும்.

பழமையான வெள்ளை தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கடிகாரத்தை உருவாக்க 11 வருடங்கள் எடுப்பதாக கூறப்படுகிறது. இது முதலை தோல் பட்டைகள் மற்றும் செதில்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Anant Ambani’s Rs 18 crore watch most expensive in the world? Here’s the truth
அம்பானி முதல் ரத்தன் டாடா வரை - இந்திய பணக்காரர்களின் ராசி என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com