அழியப்போகும் KGF: ஆந்திராவில் கொட்டிக்கிடக்கும் தங்கம் - மத்திய அரசின் பிளான் என்ன?

சுரங்கங்கள் மூடப்பட்ட நேரத்தில், ஒரு கிராம் தங்கத்தின் சந்தை விலை ரூ.400 ஆக இருந்தது. ஆனால் இன்று சந்தையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5,000க்கு மேல் விற்பனை ஆகிறது. எனவே இப்போது சுரங்கப் பணிகளை மேற்கொள்வது பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும்.
Andhra Pradesh: Gold mining set to restart in Chinturu after 2 decades
Andhra Pradesh: Gold mining set to restart in Chinturu after 2 decadesTwitter
Published on

நாட்டில் தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் சில தங்கச் சுரங்கங்களிலிருந்து தங்கம் எடுத்து வந்தாலும், அதன் தேவை அதிகமாகவே இருக்கிறது.

கர்நாடகாவில் உள்ள கேஜி எஃப் எனப்படும் கோலார் தங்க வயல், பீகாரில் உள்ள தங்க வயல் என சுரங்களில் தங்கம் வெட்டி எடுத்துகொண்டு தான் இருக்கிறார்கள். கோலார் தங்க வயல்களில் தங்கம் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

தங்க இருப்பு குறித்து ஆய்வுகள்

1970களில், தங்கத்திற்கான டிமெண்ட் உள்நாட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் அதிகமாக இருந்ததால் மத்திய அரசு தங்கம் இருக்கும் இடங்களைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளை மேற்கொண்டது.

1976 ஆம் ஆண்டில், ஆந்திரா சித்தூரில் உள்ள சிகுருகுந்தாவில் தங்கம் இருப்பு குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜி.எஸ்.ஐ) கண்டுபிடித்தது. சிகுருகுந்தாவில் 7.56 லட்சம் டன் தங்க தாதுக்களைக் கண்டறிந்தது ஜி.எஸ்.ஐ.

கோலார் தங்க வயலுக்கும் சிகுருகுந்தாவிற்கும் இடையில் சுமார் 30கி.மீ. உள்ளது.

ஜி.எஸ்.ஐ.யின் பரிந்துரையின் பேரில், மத்திய அரசு நிறுவனமான மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட், 1982 ஆம் ஆண்டு சிகுருகுந்தாவில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியது.

முதற்கட்ட அகழ்வாராய்ச்சியில் 10 லட்சம் டன் தங்க தாதுக்கள் இங்கு இருப்பதை கண்டுபிடித்தது.

அடுத்தது சித்தூர் மாவட்டத்தில் உள்ள பழைய சுரங்களான பிசாநத்தம், கோலார் சுரங்கங்களில் இருந்து சுமார் 8கி.மீ. தொலைவில் இருந்தன.

பிசாநத்தம் சுரங்கங்களில் அகழ்வாராய்ச்சி தொடங்கியதாக மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் கூறியது.

1894 முதல் 1902 வரை மைசூர் ரீஃப்ஸ் தங்கச் சுரங்க நிறுவனம் தங்கச் சுரங்க ஆய்வுகளை மேற்கொண்டது.

கைமாறிய சுரங்க ஆராய்ச்சி

1902க்குப் பிறகு பிசாநத்தம் சுரங்கங்கள் கை மாறின. நிதி நெருக்கடி காரணமாக, சிகுருகுந்தா-பிசாநத்தம் சுரங்கங்களின் நிர்வாகம் பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட்டுக்கு (பிஜிஎம்எல்) மாற்றப்பட்டது. 1990களில் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால் சிகுருகுந்தா-பிசாநத்தம் சுரங்கங்கள் மூடப்பட்டன.

வேலைவாய்ப்பு மற்றும் இழப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் சுரங்க வேலை நிறுத்தப்பட்டதை எதிர்த்து தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்குச் சென்றனர். இதையடுத்து 2006ல், சுரங்கங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதற்கிடையில், பிஜிஎம்எல் இன் சிகுருகுந்தா-பிசாநத்தம் சுரங்க உரிமம் 2008 இல் காலாவதியானது.

Andhra Pradesh: Gold mining set to restart in Chinturu after 2 decades
பீகார் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு : கொட்டிக் கிடக்கும் லட்சம் கோடி மதிப்பிலான தங்கம்

கடந்த 2018-ம் ஆண்டு தங்கம் விலை உயர்வால் சிகுருகுந்தா தங்கச் சுரங்கங்களை மீண்டும் திறக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன. அதைத் தொடர்ந்து நடந்த ஏலத்தில் என்.எம்.டி.சி நிறுவனம் டெண்டரைப் பெற்றது.

"சுரங்கங்கள் மூடப்பட்ட நேரத்தில், சந்தையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.400 ஆக இருந்தது. அந்த கணக்கின்படி தங்கம் எடுத்திருந்தால் நஷ்டம் ஏற்பட்டிருக்கும். ஆனால் இன்று சந்தையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5,000க்கு மேல் விற்பனை ஆகிறது. எனவே இப்போது சுரங்கப் பணிகளை மேற்கொள்வது பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும்," என்று BGML இன் தலைமை பொறியாளராகப் பணியாற்றிய கே.எம்.திவாகரன் தி இந்துவிடம் கூறியுள்ளார்.

சிகுருகுந்தா-பிசாநத்தம் ஒரு நிலத்தடி சுரங்கம். இங்கு 18.3 லட்சம் டன் தங்கம் கையிருப்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் 5 ஆண்டுகளில் தங்கம் வெட்டி எடுப்பது துவங்கப்படும் என தேசிய சுரங்க மேம்பாட்டு கழகம் (National Mining Development Corporation) தெரிவித்துள்ளது.

Andhra Pradesh: Gold mining set to restart in Chinturu after 2 decades
செய்கென் சுரங்கம் - இது தான் உலகின் மிக நீளமான கடலடி சுரங்கமா? எங்கே இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com