ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு அலர்ட்! எச்சரிக்கும் வல்லுநர்கள்

ஆண்ட்ராய்டு செல்போன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் சான்றிதழ்கள் இணையத்தில் கசிந்ததால் அதன் மூலம் ஆண்ட்ராய்டு போன்கள் எளிதாக ஹேக் செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Android smartphone users
Android smartphone usersTwitter
Published on

மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு போன்களை ஹேக்கர்கள் வைரஸ் மூலம் முடக்கும் அபாயம் இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வளர்ந்து வரும் நவீன உலகில் ஆண்ட்ராய்டு ஃபோன் மனிதர்களின் ஆறாவது விரலாக மாறியுள்ளது

அப்படி ஆறாவது விரலாக மாறிய ஆண்ட்ராய்டு ஃபோன்களில் எந்த அளவு சாதகம் உள்ளதோ அந்த அளவுக்கு பாதகமும் உள்ளது.

ஆண்ட்ராய்டு செல்போன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் சான்றிதழ்கள் இணையத்தில் கசிந்ததால் அதன் மூலம் ஆண்ட்ராய்டு போன்கள் எளிதாக ஹேக் செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் தங்களது ஃபோன்களை தாங்களே தயாரித்து கொள்ளும் ஆண்ட்ராய்டு ஓஇஎம்() ஆகும். இவற்றின் சான்றிதழ்கள் வெளியே கசிந்து விட்டதாக கூகுள் நிறுவன ஊழியர் லூகாஷ் சைவர்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

இந்த சான்றிதழில் உள்ள பாதுகாப்பு கோடு மூலம் அந்த ஆண்ட்ராய்டு ஃபோன்களை ஹேக்கர்கள் முடக்க நேரிடலாம் என்று கூறப்படுகிறது.

சுமார் 10 லட்சம் ஆண்ட்ராய்டு ஃபோன்கள் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக samsung மற்றும் lG ஆண்ட்ராய்டு போன்கள் முடக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Android smartphone users
உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் இந்த 50 செயலிகள் இருக்கா? - உடனே டெலிட் செய்யுங்கள்
Smart Phone
Smart PhoneTwitter

மேலே குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி மீடியாடெக் சிப்களை கொண்டு இயங்கும் பிற நிறுவன ஸ்மார்ட் போன்களும் வைரஸ் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாகவும் இதனை சாதகமாக பயன்படுத்தி ஹேக்கர்கள் செல்போன்களில் வைரஸ்களை பதிவேற்றி முடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Android smartphone users
உங்கள் குழந்தைகளுக்கு Smartphone வழங்க சரியான வயது எது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com