38 ஆண்டுக்கு பிறகு மீட்கப்பட்ட இறந்த ராணுவ வீரரின் உடல் - ஒரு திக் திக் பயணம்

அப்படி சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் காணாமல் போன ராணுவ வீரரின் உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
Siachen
Siachen Canva
Published on

இந்திய தாய் திருநாட்டுக்காக எத்தனையோ ராணுவ வீரர்கள் தங்களுடைய உயிரைத் துச்சமென மதித்து எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்டை நாடுகளுடனான போர், விபத்து... போன்ற பல காரணங்களால் இதுவரை பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்திருக்கின்றனர்.

சரி வீர மரணம் அடைந்த வீரருக்குக் குறைந்தபட்சமாக இறுதி அஞ்சலியையாவது நல்லபடியாக செலுத்தி அவர்களுடைய குடும்பங்கள் கொஞ்சம் ஆறுதல் தேடிக் கொள்வார்கள். ஆனால் வெகு சில ராணுவ வீரர்களின் உடல்கள் விபத்தில் சிக்கியோ அல்லது போரிலோ கண்டுபிடிக்க இயலாமல் போன, மாயமான கதைகள் பலவற்றை நாமே செய்திகளில் படித்திருப்போம்.

இந்திய அரசு தரப்பில் பல தேடுதல் பணிகள் நடத்தியும் பிரம்மாண்டமான போர்க்களங்கள் மற்றும் விபத்து நடைபெற்ற இடங்களில் அவர்களுடைய உடலை கண்டுபிடிக்க முடியாமல் வருத்தப்பட்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு.

அப்படி சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் காணாமல் போன ராணுவ வீரரின் உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

உலகிலேயே மிக உயரமான போர்க்களங்களில் ஒன்று இமய மலைத் தொடரில் உள்ள சியாச்சின் மலைத்தொடர். அப்பகுதியில் கடந்த 1984 ஆம் ஆண்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சந்திரசேகர் ஹர்போலா மற்றும் அவருடன் பணியிலிருந்த 19 ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பணிச் சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

Siachen
உயரமான மலையில் ஏறி சாதனைப் படைத்த கால்கள் இல்லாத ராணுவ வீரர்

பணிச்சரியில் சிக்கியவர்களில் 15 பேரின் உடல்கள் சம்பவம் நடந்த ஒரு சில நாட்களிலேயே மீட்கப்பட்டன, ஐந்து பேரின் உடல்கள் கிடைக்கவில்லை. அதில் சந்திரசேகர் ஹர்போலாவின் உடலும் ஒன்று.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானி மாவட்டத்தில் வாழ்ந்து வந்த சந்திரசேகர் ஹர்போலாவுக்கு தற்போது முழு ராணுவ மரியாதையோடு, இறுதி அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக பிபிசி ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

இப்படி ராணுவ வீரர்களின் உடல்கள் காணாமல் போவதும் பல்லாண்டு காலம் கழித்து அவர்களுடைய உடல் கிடைப்பதும் இந்தியாவுக்கு ஒன்றும் புதிய விஷயம் இல்லை. அதேபோல சியாச்சின் மலைப்பகுதியில் பணிச்சரிவால் ராணுவ வீரர்கள் உயிரிழப்பதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் புதிய விஷயம் அல்ல.

சமீபத்தில் துக்காராம் வி பாட்டில் என்கிற ராணுவ வீரரின் உடல் காணாமல் போய் பல ஆண்டுகள் கழித்து அவருடைய உடல் கிடைத்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச் சரிவில் சுமார் 129 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிக்கி உயிரிழந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட பனிச் சரிவில் 10 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட பணிச் சரிவில் நான்கு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்தியா நிர்வகித்து வரும் காஷ்மீரின் ஒரு பகுதி தான் சியாச்சின் மலைத்தொடர் என இந்தியாவும், பாகிஸ்தான் நிர்வகித்து வரும் காஷ்மீரின் ஒரு பகுதி தான் சியாச்சின் என்றும் இரு தரப்பினரும் பல தசாப்த காலமாக மோதிக் கொண்டிருக்கின்றனர்.

இதோடு சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் அக்ஷய் சின் என்கிற பகுதி, இந்தியா நிர்வகித்து வரும் காஷ்மீர் மற்றும் சியாச்சியின் மலைத்தொடருக்கு மிக அருகில் இருக்கிறது. எனவே இந்தியா தன் துருப்புகளை சியாச்சின் மலைத்தொடரிலிருந்து பின்வாங்குவது தொடர்பாக இதுவரை எந்த ஒரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

Siachen
ராணுவ குறியீடுடன் கரை ஒதுங்கிய உடல் : உளவாளியா? - முடிவுக்கு வரும் 70 ஆண்டு மர்மம் ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com