Article 370 ரத்து : காஷ்மீர் மக்களுக்கு நிகழவிருப்பது என்ன?

ஆர்டிக்கள் 370 காஷ்மீர் மக்களின் நிலம், வேலைவாய்ப்பு, கல்வி, தன்னாட்சி என பல உரிமைகளை பாதுகாத்தது. காஷ்மீர் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் சிறப்பு உரிமைகளை ரத்து செய்வது அந்த மக்களுக்கு செய்யப்பட்ட துரோகம் எனக் கூறப்படுகிறது.
Article 370 ரத்து : காஷ்மீர் மக்களுக்கு நிகழவிருப்பது என்ன?
Article 370 ரத்து : காஷ்மீர் மக்களுக்கு நிகழவிருப்பது என்ன?Twitter
Published on

ஆர்டிக்கள் 370 கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் சட்ட பிரிவாகும். 2019ம் ஆண்டு இந்த சட்டபிரிவு ரத்து செய்யப்பட்டது முதல் ஜம்மு-காஷ்மிர் இயல்புநிலையில் இல்லை.

காஷ்மீர் மக்கள் பிரதமர் நரேந்திரமோடியின் அரசை ஒருதலைபட்சமானதாகவும் மோசடி செய்வதாகவும் குற்றம்சாட்டினர். பல காஷ்மீர் தலைவர்கள் சிறையில் வைக்கப்பட்டனர்.

ஆர்டிக்கள் 370 காஷ்மீர் மக்களின் நிலம், வேலைவாய்ப்பு, கல்வி, தன்னாட்சி என பல உரிமைகளை பாதுகாத்தது. காஷ்மீர் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் சிறப்பு உரிமைகளை ரத்து செய்வது அந்த மக்களுக்கு செய்யப்பட்ட துரோகம் எனக் கூறப்படுகிறது.

ஆனால் நீதிமன்றம் காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியே என அழுத்தமாகக் கூறி அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்துகளை நீக்கியிருக்கிறது. இந்த தீர்ப்புக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஆர்டிக்கள் 370 ரத்து அந்த மாநில மக்களிடம் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் காணலாம்.

ஆர்டிக்கள் 370 திரும்பக்கொண்டுவரப்பட வேண்டும் என குரல்கள் எழும்பும் காரணத்தையும் பார்க்கலாம்.

2019ம் ஆண்டு ஆர்டிக்கள் 370 ரத்து செய்யப்பட்டது முதல் அனைத்து காஷ்மீர் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகள் செயல்பட முடியாத நிலைக்கு வந்தன. காஷ்மீரின் முக்கிய பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

இன்றுவரை குடியரசு தலைவர் ஆட்சியின் கீழ் காஷ்மீர் இருந்துவருகிறது. ஆளுநர் சட்டங்களை செயல்படுத்துபவராக இருக்கிறார்.

மத்திய அரசு புதிய சட்டதிட்டங்களைக் கடுமையாக அமல்படுத்தியதன் விளைவாக ஜம்மு காஷ்மீரின் நிலப் பரப்பின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றத்துக்கு உட்படுத்திவருகிறது. அந்த மக்களின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல்.

Supreme Court
Supreme CourtTwitter

அரசின் இந்த செயல்பாடுகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே தொடங்கிவிட்டன. வழக்கை விசாரித்த நீதிபதி சந்திர சூட் தலைமையிலான குழுவில் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் என மேலும் 4 நீதிபதிகள் அங்கம் வகித்தனர்.

சஞ்சய் கிஷன் கவுல் மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். அவர், "இராணுவம் என்பது நாட்டைக் காக்கத்தானே தவிர சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அல்ல. இத்தனை நாட்களாக ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு இராணுவத்தின் மூலம் இளைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.

Article 370 ரத்து : காஷ்மீர் மக்களுக்கு நிகழவிருப்பது என்ன?
மோடி : BJP அரசின் 7.5 லட்சம் கோடி ஊழல் - போஸ்டர் ஒட்டிய திண்டுக்கல் காங்கிரஸ்!

ஆர்டிக்கள் 370ஐ நீக்கியதன் விளைவாக இனி வெளிமாநிலத்தவர்கள் அங்கு நிலம் வாங்க முடியும். அரசு வேலைகளில் அங்கம் வகிக்க முடியும்.

பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரில் தொழில்துறை, கல்வி, சுகாதாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தப்போவதாக தெவித்திருந்தார்.

ஆர்டிக்கள் 370 இருக்கும் போது நிதி, பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல்தொடர்பு துறைகளில் மட்டும்தான் மத்திய அரசு தலையிட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இனி எல்லா துறைகளிலும் மத்திய அரசு தலையிட முடியும் என்ற ஏற்பட்டுள்ளது.

Article 370 ரத்து : காஷ்மீர் மக்களுக்கு நிகழவிருப்பது என்ன?
Manipur: "எங்களை எலிகளை போல வேட்டையாடினார்கள்" BJP அரசு செய்ததென்ன? - விகடனின் ஆவணப்படம்!

காஷ்மீரில் சில மாதங்களுக்கு முன்பு லித்தியம் கண்டறியப்பட்டதை நாம் அறிவோம்! இதில் தனியார் சுரங்கம் அமைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

ஆர்ட்டிகள் 370 படி காஷ்மீருக்குள் பிற மாநிலத்தவர்கள் நிரந்தரமாக குடியேற முடியாது. வெளி மாநிலத்தவரை திருமணம் செய்யும் பெண்களுக்கு மட்டும் சொத்துரிமை வழங்கப்படாது.

காஷ்மீரில் மேற்கு பாகிஸ்தானில் இருந்து வந்த 5000க்கும் மேலான அகதிகளின் குடும்பங்கள் இருக்கின்றன. ஆர்டிக்கள் 370 ரத்தால் அவர்களுக்கு வாக்குரிமை கிடைக்கும்.

அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காஷ்மீர் தனது சிறப்பு உரிமைகளை இழந்து நிற்பது பிஜேபியின் "ஒரே நாடு" என்ற கொள்கைக்கு வலுசேர்ப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Article 370 ரத்து : காஷ்மீர் மக்களுக்கு நிகழவிருப்பது என்ன?
இந்தியாவில் மற்றொரு காஷ்மீர்: மைனஸ் டிகிரியில் மயக்கும் லம்பாசிங்கி கிராமம்! ஏன் ஸ்பெஷல்?

அதேசமயம் காஷ்மீர் மக்களைப் பொருத்தவரையில் வரலாறு முழுவது நிகழப்போகும் போராட்டத்தின் தொடக்கமாக இது இருக்கிறது.

இந்தியா என்ற நாடு உருவாகும் போது காஷ்மீரை இணைப்பதற்காக அந்த மக்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. 1949ம் ஆண்டு ஆர்டிக்கள் 370ஆக அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. படிப்படியாக தங்களது சிறப்பு உரிமைகளை நிலைநாட்டியது காஷ்மீர். ஆனால் இப்போது காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ஒரு தற்காலிக ஏற்பாடு என அரசு கூறுவது காஷ்மீர் மக்களுக்கு நிகழ்த்தப்படும் துரோகம் என்ற கருத்தும் பரவலாக பேசப்படுகிறது.

Article 370 ரத்து : காஷ்மீர் மக்களுக்கு நிகழவிருப்பது என்ன?
காஷ்மீர் ஃபைல்ஸ்: "தவறை நிரூபித்தால் படம் இயக்குவதை விட்டுவிடுகிறேன்" - இயக்குநர் சவால்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com