அருணாச்சலம்-மியான்மர் எல்லைக்கு அருகே இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய குகையை தற்செயலாக எவரெஸ்டர் மலையேற்ற வீரர்கள் குழு கண்டுபிடித்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போரின்போது நேச நாட்டுப் படைகளுக்கான ஒரு போக்குவரத்து முகாமாக இந்த குகை செயல்பட்டதாக கூறப்படுகிறது.
தற்செயலாக மலையேறுபவர்கள், குகையை கண்டுபிடித்தது மட்டுமல்லாமல், அடுத்த நாள் அந்த இடத்தைப் பற்றிய புகைப்பட ஆதாரங்களையும் விவரங்களையும் சேகரித்தனர்.
ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியும், மலையேற்றக் குழுவின் அங்கமான தின்சா கிராமத்தைச் சேர்ந்தவருமான குன்வாங் குசியா, இந்த குகையை நேச நாட்டுப் படைகள் பயன்படுத்தியதாக விளக்கினார்.
குகையின் ராட்சத பாறைகள் பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்கியதாக குடியிருப்பாளர்கள் நம்புகின்றனர்.
இந்த மலையேற்றம், உயரமான மலைகள், மரங்கள் மற்றும் ராட்சத பாறைகள் வழியாக செல்கிறது. இது மலையேறுபவர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் அறியப்படாத அனுபவத்தை அளித்ததாக அந்த குழு கூறியது.
அருணாச்சலப் பிரதேசத்தின் தொலைதூர மலைகளில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தியதன் எச்சங்கள் இருப்பதால், பலருக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust