ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லஷ்மி படங்களை அச்சிடுங்கள்-அரவிந்த கெஜ்ரிவால்

நாட்டை வளம் பெற செய்யவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் புதுவிதமான யோசனை வழங்கியுள்ளார் டெல்லி முதல்வர்.
Arvind Kejriwal
Arvind KejriwalTwitter
Published on

இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் உருவப்படங்கள் இடம்பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக சுதந்திரப் போராட்டத்தில் பாடுபட்ட நேதாஜி போன்ற தலைவர்களின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் அகில பாரத இந்து மகாசபையின் மாநில செயல் தலைவர் சந்திரசூர் ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ள மகாத்மா காந்திக்கு எந்த விதத்திலும் நேதாஜி குறைந்தவர் இல்லை என்றும் அவரின் உருவப்படம் ரூபாய் நோட்டுகள் இடம் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர்.

இந்திய ரூபாய் நோட்டு
இந்திய ரூபாய் நோட்டுcanva

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருக்கின்றன.

இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூபாய் நோட்டுகளில் கடவுளின் உருவப்படங்கள் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது தற்போது இணையத்தில் பேசும் பொருளாகி உள்ளது.

இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகரின் உருவப்படம் இடம் பெற வேண்டும்.

Aravind Kejriwal
Aravind KejriwalTwitter

தொடர்ந்து நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும் கடவுளின் ஆசிர்வாதம் இல்லை என்றால் சில சமயங்களில் நம்முடைய முயற்சிக்கு பலன் இருக்காது; எனவே ரூபாய் நோட்டுகளின் ஒரு புறம் மகாத்மா காந்தியின் உருவமும், மறுபுறம் கடவுள்களின் உருவப்படங்கள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனால் நாட்டை வளம் பெற செய்ய முடியும், பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று யோசனை வழங்கியுள்ளார்.

Arvind Kejriwal
இந்திய ரூபாய் ஏன் சரிகிறது? இதனால் நமக்கு ஏற்படும் ஆபத்துகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com