அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் மாவட்டத்தில், கோகிலாமுக் அருகே இருக்கும் மஜூலி தீவில் உள்ள ஒரு காடு தான் மொலாய் காடு.
இந்தியச்சுற்றுச்சூழல் ஆர்வலரும் வனத்துறை ஊழியருமான ஜாதவ் பயேங்கின் செல்லப்பெயரான மொலாய் என்ற பெயர் இந்த காட்டுக்கு சூட்டப்பட்டுள்ளது.
ஜாதவ் பயேங், மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தனது பயணத்தைத் தொடங்கினார். 1980 ஆம் ஆண்டில், சமூக வனவியல் பிரிவு அருணா சபோரியில் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் மண் அரிப்பை எதிர்த்து மரம் நடும் திட்டத்தைத் தொடங்கினார். சுமார் 30 ஆண்டுகளாக சாதவ் பயேங்கால் தன்னந்தனியாக மொலாய் காடு பராமரிக்கப்பட்டது. அவர் பராமரித்த இந்தக் காடு இப்போது சுமார் 550 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கியதாகப் பரந்து நிற்கிறது.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஸ்ரீ பிரணாப் முகர்ஜி, ஜாதவ் பயேங்கிற்கு ஏப்ரல் 08, 2015 அன்று பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
இந்த தனித்துவமான மொலாய் காடுகளில் வங்காளப் புலிகள், இந்திய காண்டாமிருகங்கள், ஆசிய யானைகள், மான்கள், கழுகுகள் மற்றும் எண்ணற்ற பறவை இனங்கள் உள்ளன. இந்த வனம் அழிந்து வரும் உயிரினங்களுக்கு ஒரு முக்கிய சரணாலயத்தை வழங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 யானைகளைக் கொண்ட ஒரு யானைக் கூட்டம் வழக்கமாக இந்த மொலாய்க் காடுகளுக்குச் சென்று பொதுவாக ஆறு மாதங்கள் வரை தங்கியிருக்கும். அவை காட்டில் 10 கன்றுகளை பெற்றெடுத்துள்ளன.
வனப்பகுதியில் குறைந்தது 5 அரச வங்காளப் புலிகள் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் புலிகளில் ஒன்று இரண்டு குட்டிகளைப் பெற்றெடுத்ததாகக் கூறப்பட்டது.
பயேங்கும் அவரது மொலாய் வனமும், சமாளிக்க முடியாத பல சவால்களை எதிர்கொண்டாலும் இன்று அழியா வனமாக இருக்கிறது.
மொலாய் காடு ஒரு மனிதனின் உழைப்புக்கான ஒரு சான்று மட்டுமல்ல, மனித ஆன்மாவின் எல்லையற்ற ஆற்றலுக்கான ஒரு வாழ்க்கைச் சான்றாகும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust