உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் தேர்தல் முடிவுகள்: இன்று வெளியீடு

நாடாளுமன்ற தேதலுக்கு இணையாக கருதப்படும், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்படுகின்றன.
உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் தேர்தல் முடிவுகள்

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் தேர்தல் முடிவுகள்

NewsSense

Published on

நாடாளுமன்ற தேதலுக்கு இணையாக கருதப்படும், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்படுகின்றன.

எந்த மாநிலங்களில் யார் ஆட்சியை பிடிப்பர் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

ஐந்து மாநில தேர்தல்

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்தன.

ஐரோப்பாவுக்கு இணையான மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தின் சட்டசபை தேர்தல், கடந்த மாதம் துவங்கி, இம்மாதம் 8ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்தது.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் தேர்தல் முடிவுகள்

Ukraine : நேட்டோவில் சேர விருப்பமில்லை; ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - செலென்ஸ்கி

Rahul Gandhi

Rahul Gandhi

NewsSense

தொகுதி எண்ணிக்கை

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து முடிந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்துக்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், மணிப்பூர் மாநிலத்துக்கு இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மார்ச் 10-ம் தேதி, எண்ணப்படுகின்றன. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வாக்கு இயந்திரங்கள், `ஸ்ட்ராங் ரூம்’ என்று அழைக்கப்படும் அறையில் வைக்கப்பட்டுள்ளன. மார்ச் 10 - தேதி மதியத்துக்குள் எந்த மாநிலத்தில், எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது தெரிந்துவிடும்

யோகி

யோகி

NewsSense

Exit Polls

பஞ்சாப்

பஞ்சாபில் மொத்தம் 117 இடங்கள் உள்ளன. அங்கு பெரும்பான்மைக்கு 59 இடங்கள் அவசியம்.

இந்தியா டுடே ஆக்சிஸ் மை கருத்துக் கணிப்பின்படி பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கலாம்.

அதன்படி, மொத்தம் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 76 முதல் 90 இடங்கள்வரை கிடைக்கலாம். காங்கிரஸ் கட்சிக்கு 19 முதல் 31 இடங்கள் வரை கிடைக்கலாம். அகாலி தளம் கட்சிக்கு 7 முதல் 11 இடங்கள் வரை கிடைக்கலாம்.

2017ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் 77 இடங்களை வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்திருந்தது.

ரிபப்ளிக் டிவி மற்றும் பி-மார்க் (P-MARQ) கருத்துக்கணிப்பின்படி ஆம் ஆத்மி கட்சிக்கு 62 முதல் 70 இடங்கள் கிடைக்கலாம் என்றும் காங்கிரஸுக்கு 23 முதல் 31 இடங்கள் கிடைக்கலாம். ஷிரோமணி அகாலி தளம் கட்சிக்கு 16 முதல் 24 இடங்கள் கிடைக்கலாம். ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்துக் கணிப்பின்படி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி 51 முதல் 61 இடங்களும், காங்கிரஸுக்கு 22 முதல் 28 இடங்களும், அகாலி தளம் கட்சிக்கு 20 முதல் 26 இடங்களும் கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட்

70 தொகுதிகள் கொண்ட உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.ஏபிபி சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பின்படி உத்தராகாண்டில் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கலாம்

அதேசமயம் இந்தியா டுடே மை ஆக்சிஸ் கருத்துக் கணிப்பு, பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கலாம் என்று கணித்துள்ளது.ஏபிபி சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பின்படி, உத்தராகண்டில் காங்கிரஸ் 32 முதல் 38 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 26 முதல் 32 இடங்களையும் பெறலாம். மற்ற கட்சிகளுக்கு மூன்று முதல் ஏழு இடங்கள் வரை கிடைக்கலாம். 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் உத்தராகாண்டில் பாஜக பெரும்பான்மை பலம் பெற்றிருந்தது.

இந்தியா டுடே ஆக்சிஸ் மை கருத்துக்கணிப்பின்படி, பாஜக 36 முதல் 46 இடங்களையும், காங்கிரஸ் 20 முதல் 30 இடங்களையும் பெறலாம் என கணிக்கப்படுகிறது.

இந்த கருத்துக்கணிப்பின்படி, பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு முதல் நான்கு இடங்களைப் பெறலாம். இரண்டு முதல் ஐந்து இடங்கள் வரை பிற கட்சிகள் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.

கோவா

கோவா சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 40 இடங்களில் பெரும்பான்மைக்கு 21 இடங்களைப் பெறுவது அவசியம். இங்கும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்தியா டுடே ஆக்சிஸ் மை கருத்துக்கணிப்பின்படி, கோவாவில் பாஜக 14 முதல் 18 இடங்களும், காங்கிரஸுக்கு 15 முதல் 20 இடங்களும், திரிணமூல் காங்கிரஸுக்கு 2 முதல் 5 இடங்களும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற கட்சிகள் நான்கு இடங்களைப் பெறலாம்.ஏபிபி சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பின்படி பாஜக 13 முதல் 17 இடங்களையும், காங்கிரஸ் 12 முதல் 16 இடங்களையும் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஒன்று முதல் ஐந்து இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் ஐந்து முதல் ஒன்பது இடங்களையும் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கோவாவில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் அங்கு கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைப்பதில் பாஜக வெற்றி பெற்றது.

உத்தரபிரதேசம்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 403 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மை பெறுவதற்கு 202 இடங்கள் வெற்றி பெற வேண்டும். கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் உத்தர பிரதசத்தில் 312 இடங்களை வென்று பெரும் பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. யோகி ஆதித்யநாத் முதல்வர் ஆனார். இந்த தேர்தலில் பாஜக கூட்டணி 262 முதல் 277 இடங்கள் வரை பிடிக்கும் என்றும் சமாஜ்வாதி கட்சி 119 முதல் 134 இடங்கள் பிடிக்கும் என்றும் சிஎன்என் நியூஸ் 18 கணித்துள்ளது.

இந்தியா நியூஸ், நியூஸ் எக்ஸ் - போல்ஸ்ட்ராட், ஈடிஜி உள்ளிட்டவையும் பாஜக 200 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என கூறுகின்றன.

ரிபப்ளிக் பி-மார்க் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி சுமார் 240 இடங்கள் பெறும் என்றும், சமாஜ்வாதி 140 இடங்களை பெறும் என்றும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சுமார் 17 இடங்கள் பெறும் என்றும் காங்கிரஸ் 4 இடங்களை பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் தேர்தல் முடிவுகள்

Ukraine : போர் நிச்சயம் முடியும், ஆனால்... - தார்விஷின் மனதை உருக்கும் கவிதை | Podcast

தமிழக அதிகாரிகள்

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில், தமிழகத்தைச் சேர்ந்த 63 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக, தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் சென்னை திரும்பினர். இந்நிலையில், ஐந்து மாநிலங்களிலும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடப்பதையடுத்து, தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீண்டும் அங்கு சென்றுள்ளனர்.

'ஓட்டு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின், 12ம் தேதி தான், தேர்தல் பணியில் இருந்து, 63 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் விடுவிக்கப்படுவர்' என, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com