Jharkhand: வதந்தியை நம்பி ரயிலில் இருந்து குதித்த 3 பயணிகள் உயிரிழப்பு - என்ன நடந்தது?

ரயிலில் தீப்பிடித்ததாக யாரோ ஒருவர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு பொய்யான தகவல் தெரிவித்ததை அடுத்து அவர் ரயிலை நிறுத்தியது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
At least three dead as passengers jump from running train in Jharkhand ( Rep imag)
At least three dead as passengers jump from running train in Jharkhand ( Rep imag)Twitter

சாஸாராம் இண்டர்சிட்டி விரைவு ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தியை நம்பி, உயிர் பிழைத்துக்கொள்வதற்காக கீழே குதித்த 3 பயணிகள் எதிரே வந்த சரக்கு ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் ஜார்க்கண்ட்டில் நடந்துள்ளது.

ராஞ்சி-சசரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்ஜினில் தீப்பிடித்ததாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து ஓடும் ரயிலில் இருந்து குதித்த பயணிகள், எதிர்திசையில் இருந்து வந்த சரக்கு ரயிலில் மோதியதால் இந்த சம்பவம் நடந்தது.

உள்ளூர் காவல்துறை மற்றும் CRPF குழுக்கள் மீட்புப் பணியை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயிலில் தீப்பிடித்ததாக யாரோ ஒருவர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு பொய்யான தகவல் தெரிவித்ததை அடுத்து அவர் ரயிலை நிறுத்தியது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரைக் காப்பாற்ற எண்ணி 3 பேர் பரிதாபமாக உயிரை விட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

At least three dead as passengers jump from running train in Jharkhand ( Rep imag)
ரயில் பெட்டிகளில் காணப்படும் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் எதற்கு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com