நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

இங்கு வரும் பக்தர்கள் கபிலா நதியில் உள்ள மஹாசீர் மீன்களை வணங்கி, அவற்றிற்கு மலர்களை சமர்பிப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. மீனிடம் பிரார்த்தனை செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
At This Karnataka Temple, Mahseer Fish Are Worshipped
At This Karnataka Temple, Mahseer Fish Are WorshippedTwitter

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் ஷிஷிலா கிராமத்தின் கபிலா நதிக்கரையில் ஸ்ரீ ஷிஷிலேஷ்வரா கோயில் அமைந்துள்ளது. இந்த புகழ்பெற்ற கோயில் சிவன், சுவாமியம்பு அவதாரம் காரணமாக மத்ஸ்ய தீர்த்த க்ஷேத்ரா என்றும் அழைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விஷ்ணுவின் அவதாரம் தெய்வத்திற்கு மீன் படைக்கப்படுகிறதாக கூறப்படுகிறது.

இங்கு வரும் பக்தர்கள் கபிலா நதியில் உள்ள மஹாசீர் மீன்களை வணங்கி, அவற்றிற்கு மலர்களை சமர்பிப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. மீனிடம் பிரார்த்தனை செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கபிலா நதியைத் தவிர இந்த கோயிலின் எல்லா திசைகளும் மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது.

நம்பிக்கைகளின்படி, விஷ்ணு நதியில் மத்ஸ்ய (மீன்) வடிவத்தில் வசிக்கிறார். எனவே தண்ணீர் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். மீனுக்கு ஒரு பிடி சாதம் கொடுத்தால் தோல் வியாதிகள் உட்பட அனைத்து நோய்களும் குணமாகும் என்பதும் இவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கோயில் கட்டப்பட்ட ஆண்டு குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. தொல்லியல் துறையைச் சேர்ந்த ஒரு பொறியாளர் இதன் வரலாற்றைப் பற்றி பேசினார். இக்கோயிலில் சிவபெருமான் உத்பவ லிங்க வடிவில் வழிபடப்படுகிறார் என்றார். பொறியியலாளரின் கூற்றுப்படி, பழங்குடியினர் லிங்கத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அருகிலுள்ள மலை குமார குட்டாவில் கண்டுபிடித்தனர். இங்கு நீண்ட காலமாக லிங்கம் வழிபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கபிலா நதியில் மீன்களுக்கு பூக்கள் கொடுப்பதை ஸ்ரீ சிஷிலேஷ்வரா கோவில் நிர்வாகம் தடை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆற்றில் நீர்வரத்தும் குறைந்துள்ளது.

At This Karnataka Temple, Mahseer Fish Are Worshipped
இந்தியாவின் முதல் ’ஓம்’ வடிவ கோயில் எங்கு உள்ளது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com