ATM -லிருந்து குழந்தைகள் விளையாடும் பணம் வந்ததால் பரபரப்பு - எங்கே?

கணக்கு வாத்தியார் தப்பு பண்ணாக் கூட கால்குலேட்டர் பண்ணாது என்பது சரி தான். ஆனால் சில நேரங்களில் இயந்திரங்களும் சில தவறுகளை செய்கின்றன. அவற்றை தவறான வழிகளில் பயன்படுத்துக்கொள்கின்றனர்.
ATM -லிருந்து குழந்தைகள் விளையாடும் பணம் வந்ததால் பரபரப்பு - எங்கே?
ATM -லிருந்து குழந்தைகள் விளையாடும் பணம் வந்ததால் பரபரப்பு - எங்கே?Twitter
Published on

நம் வாழ்க்கையை எளிமையாக்க பல வழிகளில் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. இந்த தொழில்நுட்பங்கள் மிகவும் நம்பக தன்மை வாய்ந்ததாக இருப்பதே இவற்றின் வளர்ச்சிக்கு காரணம்.

கணக்கு வாத்தியார் தப்பு பண்ணாக் கூட கால்குலேட்டர் பண்ணாது என்பது சரி தான். ஆனால் சில நேரங்களில் இயந்திரங்களும் சில தவறுகளை செய்கின்றன. அவற்றை தவறான வழிகளில் பயன்படுத்துக்கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் உத்திர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது.

அங்குள்ள ஏ.டி.எம் ஒன்றில் குழந்தைகளின் விளையாட்டுப் பணம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிஷன் விஷ்வகர்மா என்பவர் ஏடிஎம் ஒன்றில் 5000 ரூபாய் பணம் எடுத்துள்ளார். அதில் வந்த 200 ரூபாய் நோட்டில் "Full of Fun" என எழுதப்பட்டிருந்தது. இந்த குழந்தைகளுக்கான நோட்டை ஏடிஎம் ஏற்றுக்கொண்டது அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஏடிஎம் மூலம் பணம் அனுப்பியவர்கள் யாரேனும் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கிஷன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார் ஆனால் எழுத்துப்பூர்வமான புகார் கொடுக்கவில்லை.

இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ATM -லிருந்து குழந்தைகள் விளையாடும் பணம் வந்ததால் பரபரப்பு - எங்கே?
ஒரு லட்சம், தங்கம், வெள்ளி... கவுன்சிலர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய கர்நாடக அமைச்சர்!

சம்பவ இடத்துக்கு வந்த இரண்டு காவலர்கள் ஏடிஎம்மை பார்த்துவிட்டு மட்டும் சென்றிருக்கின்றனர். காவல் கண்காணிப்பாளர் இளமாறன் எழுத்துப்பூர்வமான புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அத்துடன் வங்கி தொடர்புடைய பிரச்னை என்பதனால் வங்கி சார்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

அந்த பகுதி மக்கள் இந்த சம்பவத்துக்கு வங்கி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இது போல ஏடிஎம்மில் தவறான பணம் வருவது முதன் முறையல்ல. கள்ள நோட்டுகள் புழக்கம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னரும் தொடர்வது வருந்தத்தக்க ஒன்று.

ATM -லிருந்து குழந்தைகள் விளையாடும் பணம் வந்ததால் பரபரப்பு - எங்கே?
"ரூபாய் நோட்டுகளில் இயேசு, அல்லாஹ் படங்களையும் சேர்க்க வேண்டும்" - கெஜ்ரிவாலுக்கு பதிலடி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com