“ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டது எனது வாழ்நாள் பாக்கியம்"- நடிகர் ரஜினிகாந்த்
“ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டது எனது வாழ்நாள் பாக்கியம்"- நடிகர் ரஜினிகாந்த்Twitter

“ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டது எனது வாழ்நாள் பாக்கியம்"- நடிகர் ரஜினிகாந்த்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்வை காணொளி வாயிலாக கண்டு தரிசித்தார் வானதி சீனிவாசன்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.

நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர்.

கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் காலை 11.30 மணிக்கு தொடங்கும்.

அயோத்தி ராமர் கோயிலை அலங்கரிக்க 200 டன்னுக்கும் அதிகமான மலர்கள், 150 டன்னுக்கும் அதிகமான அசோக மரஇலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ராமர் கோயில் திறப்பை தனியார் கோயில்களில் நேரலை செய்யவோ பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை

ஒரு வேளை கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் - சென்னை உயர்நீதிமன்றம்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் சென்றுள்ளனர்

அயோத்தியில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அனுபம் கெர் சந்திப்பு!

நேரடி ஒளிபரப்பு செய்ய மாட்டோம்

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பஜனை நிகழ்ச்சியின்போது எந்த ஒரு காணொளி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியுடன்தான் அனுமதி கோரப்பட்டது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி கோயிலில் எல்இடி திரை அகற்றப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டிய நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் செய்ய தடையில்லை

அயோத்தி ராமர் கோயில் திறப்பை தனியார் இடங்களில் நேரலை செய்ய தடையில்லை. சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் செய்யவும் தடையில்லை; நீதிமன்ற உத்தரவுப் படி விருப்பமுள்ளவர்கள் சிறப்பு பூஜைகள், அன்னதானங்கள் செய்து கொள்ளலாம் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராம்சரண், சச்சின், அம்பானி குடும்பத்தினர்கள், கத்ரீனா கைஃப், ஆயுஷ்மான் குரானா, ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் வந்துள்ளனர்.

ராமர் கோயில் திறப்பு விழா - பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் பாராட்டு!

அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

ஆன்மீகத்தில் அரசியல் நடத்தவே  வந்திருக்கிறார்

"அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் போது முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு செல்லாமல் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால் அவர் ஆன்மீகத்திற்காக வரவில்லை.

ஆன்மீகத்தில் அரசியல் நடத்தவே அவர் வந்திருப்பது தெரிகிறது பெரிய பதவியில் இருக்கக் கூடிய ஒருவர் இவ்வளவு கீழே இறங்கி வந்து பொய்களை உரைப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது" - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேட்டி

அயோத்தியில் பிரதமர் மோடி பேச்சு

  • அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் புதிய சகாப்தம் உருவாகியுள்ளது

  • ராமர் என்பது பிரச்னை அல்ல தீர்வு. இந்தியா இன்றுதான் தீபாவளியை கொண்டாடுகிறது

  • கோயில் கட்டுவதற்கு ஏற்பட்ட தாமதத்திற்கு ராமரிடம் மன்னிப்பு கோருகிறேன்

  • யாரையும் வீழ்த்தியதால் கிடைத்த வெற்றி அல்ல. கண்ணியமாக கிடைத்த வெற்றி

  • கரசேவகர்கள், நீதித்துறைக்கு நன்றி

“இனி ராமர் கொட்டகையில் குடியிருக்க மாட்டார்” -பிரதமர் மோடி

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்வை காணொளி வாயிலாக கண்டு தரிசித்த வானதி சீனிவாசன்

“ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் நான் கலந்துகொண்டது எனது வாழ்நாள் பாக்கியம்" - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

logo
Newssense
newssense.vikatan.com