அயோத்தியில் இன்று ராமர் கோவில் திறக்கப்பட்டிருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில் முதல் பூஜையை செய்தார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி பூஜை செய்வதற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.
பாஜகவை சேர்ந்தவரும் விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் தலைவருமான சுப்பிரமணிய சுவாமி பிரதமருக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியசுவாமி, “அயோத்தி ராமர் கோயில் பூஜையில், மோடியின் ‘பிரதமர்' என்ற அந்தஸ்து பூஜ்ஜியம்தான். அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ராமரை பின்பற்றியது இல்லை. குறிப்பாக அவரது மனைவியிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை
கடந்த 10 ஆண்டுகளில் ராம ராஜ்யத்தின்படி அவர் பிரதமராக நடக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.