இந்தியாவின் Bachelor கிராமம் இது தான்! 50 ஆண்டுகளாக இங்கு யாருக்கும் திருமணமாகாதது ஏன்?

சுமார் 50 ஆண்டுகளாக இங்கிருக்கும் எந்த ஒரு ஆண்மகனுக்கும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த கிராமத்தை பேச்சுலர்கள் கிராமம் என்று அழைக்கின்றனர்
இந்தியாவின் Bachelor கிராமம் இது தான்! 50 ஆண்டுகளாக இங்கு யாருக்கும் திருமணமாகாதது ஏன்?
இந்தியாவின் Bachelor கிராமம் இது தான்! 50 ஆண்டுகளாக இங்கு யாருக்கும் திருமணமாகாதது ஏன்? ட்விட்டர்

சுமார் 50 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருக்கும் எந்த ஒரு ஆணுக்கும் திருமணம் ஆகவில்லை. 50 வருடங்களாக பேச்சுலர்களால் நிறைந்துள்ளது பீகாரின் பர்வான் காலா கிராமம்.

திருமணம் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு நிகழ்வு. அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. நமக்கென்று ஒரு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து அவர்களோடு நம் மிச்ச வாழ்க்கையை கடக்கிறோம்.

பல காரணங்களுக்காக ஒரு சிலருக்கு திருமணம் நடைபெறாமல் இருக்கலாம். கிண்டலாக நாம் பேசினாலும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிரவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படி தான் இங்கு ஒரு கிராமமே திருமணமாகதவர்களால் சூழ்ந்துள்ளது. ஏன் இங்குள்ள ஆண்களுக்கு கல்யாணம் ஆகவில்லை?

பேச்சுலர்கள் கிராமம்

பீகாரின் கைமுர் மலைகளுக்கு அருகில் அமைந்திருக்கிறது பர்வான் காலா என்கிற கிராமம். இங்கு சுமார் 130 ஆண்கள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர்.

இதுவே இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் திருமணமாகாத ஆண்கள் இருக்கும் கிராமம் ஆகும்.

சுமார் 50 ஆண்டுகளாக இங்கிருக்கும் எந்த ஒரு ஆண்மகனுக்கும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த கிராமத்தை பேச்சுலர்கள் கிராமம் என்று அழைக்கின்றனர்

இந்தியாவின் Bachelor கிராமம் இது தான்! 50 ஆண்டுகளாக இங்கு யாருக்கும் திருமணமாகாதது ஏன்?
15 வீடுகள், 159 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் மிக உயரமான கிராமம் பற்றி தெரியுமா?

என்ன காரணம்?

இந்த கிராமத்தில் ஒருவர் வசிக்க அடிப்படையாக தேவைப்படும் எந்த வசதிகளுமே இல்லை. தண்ணீர், மின்சாரம், சரியான சாலைகள், தகவல் தொடர்பு வசதிகள் என்று எதுவுமே இல்லை. பள்ளிக்கூடங்களும் அவ்வளவாக இல்லை, இருந்தாலும் ஆசிரியர்கள் இல்லை. ரயில் நிலையங்கள் இங்கு இல்லை

இதனால் இங்குள்ள ஆண்களுக்கு தங்களின் மகள்களை திருமணம் செய்துவைக்க பெற்றோர் அஞ்சுகின்றனர். அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு இடத்தில் எப்படி ஒருவரால் ஒரு நாளையேனும் கழிக்கமுடியும்?

இந்தியாவின் Bachelor கிராமம் இது தான்! 50 ஆண்டுகளாக இங்கு யாருக்கும் திருமணமாகாதது ஏன்?
Longwa: இந்திய-மியான்மர் எல்லையில் இரட்டை குடியுரிமை கொண்ட பழங்குடி கிராமம்!பின்னணி என்ன?

அரசு என்ன செய்கிறது?

பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு 2015ஆம் ஆண்டு வாக்கில் தான் இந்த கிராமத்துக்கு சாலைகளே போடப்பட்டது. அதுவும் கிராம மக்கள் ஒன்றிணைந்து போடப்பட்டது.

இதன் பிறகு, கிராம மக்களின் நீண்ட போராட்டத்தில் 2017ல் தான் ஒருவருக்கு திருமணம் ஆகியுள்ளது.

தங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்காக அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், எந்த பயனும் இல்ல என்கின்றனர் பர்வான் கால கிராம மக்கள்

இந்தியாவின் Bachelor கிராமம் இது தான்! 50 ஆண்டுகளாக இங்கு யாருக்கும் திருமணமாகாதது ஏன்?
இந்தியாவில் மற்றொரு காஷ்மீர்: மைனஸ் டிகிரியில் மயக்கும் லம்பாசிங்கி கிராமம்! ஏன் ஸ்பெஷல்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com