பெங்களூரில் உள்ள பள்ளியில், மாணவர்களின் பைகளில் ஆணுறை, சிகரெட் உள்ளிட்டவற்றை கல்வித் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் .
பெங்களூரில் KAMS என்ற அசோசியேட்டட் மேனேஜ்மெண்ட்ஸ் ஆஃப் பிரைமரி அண்ட் செகண்டரி ஸ்கூல்ஸ் ஆஃப் கர்நாடகா என்ற பள்ளியில், சர்ப்ரைஸ் ரெய்டு நடத்தப்பட்டது, அப்போது மாணவர்களின் பைகளை சோதித்த நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அப்போது மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், சிகரெட்கள், சிகரெட் லைட்டர்கள், கருத்தடை மாத்திரைகள் போன்றவற்றை அதிகாரிகள் கண்டெடுத்திருக்கின்றனர்.
இவற்றை 8,9, மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் பைகளிலிருந்து அவர்கள் கைபற்றியுள்ளனர். பெங்களூரின் மற்ற சில பள்ளிகளிலும் அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
மாணவர்கள் அனுமதியில்லாமல் பள்ளிக்கு செல்ஃபோன் எடுத்துவருவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நகரபவி கூறுகையில் இந்த விஷயம் ஆசிரியர்கள் மட்டுமல்லாது மாணவர்களின் பெற்றோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மேலும், மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுப்பு அளித்து, அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறும் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இவையல்லாமல், சில மாணவர்கள் தண்ணீர் பாட்டிலில் மதுபானம் கலந்து கொண்டுவந்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த செய்தி வெளியானதை அடுத்து, இணையவாசிகள், தங்கள் பள்ளிப் பருவத்தில் என்ன என்ன எடுத்து சென்றனர் என்பதை நினைவு கூறி வருகின்றனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust