Bharat Jodo Nyay Yatra: கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு - தர்ணா செய்யும் ராகுல் காந்தி!

"நாங்கள் எந்த பிரச்னையையும் ஏற்படுத்த விரும்பவில்லை. கோவிலுக்குள் பிரார்த்தனை செய்ய விரும்புகிறோம். பிரதமர் மோடிதான் இனி யார் கோவிலுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்வாரா?"
Bharat Jodo Nyay Yatra: கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு - தர்ணா செய்யும் ராகுல் காந்தி!
Bharat Jodo Nyay Yatra: கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு - தர்ணா செய்யும் ராகுல் காந்தி!Twitter

அசாம் மாநிலத்தில் ஹைபோராகான் பகுதியில் உள்ள ஶ்ரீ ஶ்ரீ சங்கர் தேவ் சாஸ்த்ரா கோவிலுக்கு ராகுல் காந்தி நுழைய அதிகாரிகள் அனுமதி மறுத்தது சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கிறது.

ராகுல் காந்தி பாரத் ஜடோ நியாய் யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நியாய பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மணிப்பூரில் இந்த யாத்திரைத் தொடங்கப்பட்டது. இப்போது அசாமில் நடைபெற்று வருகிறது.

ராகுல் பிற காங்கிரஸ் தலைவர்களுடன் நடந்துசென்றபோது ஹைபோராகான் பகுதியில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகிளா காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் இறங்கினர். ராகுல் காந்தியும் தர்னாவில் பங்கெடுத்தார். ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதன் காரணத்தைக் கூறுமாறு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

"நாங்கள் எந்த பிரச்னையையும் ஏற்படுத்த விரும்பவில்லை. கோவிலுக்குள் பிரார்த்தனை செய்ய விரும்புகிறோம். பிரதமர் மோடிதான் இனி யார் கோவிலுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்வாரா?" என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

Bharat Jodo Nyay Yatra: கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு - தர்ணா செய்யும் ராகுல் காந்தி!
மல்யுத்தம் கற்றுக்கொண்ட ராகுல் காந்தி - புகைப்படத்தின் பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com