பீம்டால் : இந்த குளிர்காலத்திற்கு நிச்சயம் பார்க்க வேண்டிய சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

பீம்டாலில் கோவில் மற்றும் ஏரி மட்டும் தான் பார்க்க முடியுமா? என்றால் இல்லவே இல்லை. இயற்கை மற்றும் சாகசத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு பீம்டாலில் அனுபவிக்க பல விஷயங்கள் உள்ளன.
Bhimtal should be on your winter travel wishlist; here's why
Bhimtal should be on your winter travel wishlist; here's whycanva
Published on

நம் பட்ஜெட்டுக்கு ஏற்றபோல இந்த குளிர்காலத்திற்கு ஒரு இடம் செல்ல வேண்டும் என்று நினைப்போம். அப்படி சுற்றுலா செல்ல இந்தியாவிலேயே பல இடங்கள் உள்ளன. இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பீம்டால் பற்றி தான் சொல்ல போகிறோம்.

இந்த பீம்டால் அமைதியான ஏரிக்கரை அமைப்பிற்கு பெயர்பெற்றது. இந்த சிறிய சுற்றுலா நகரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பீமேஷ்வர் மகாதேவ் கோவில் உள்ளது. கோயிலுக்காக இந்த மலை நகரத்திற்கு மக்கள் சென்று வருகின்றனர்.

ஆனால் பீம்டாலில் இவை மட்டும் தான் பார்க்க முடியுமா? என்றால் இல்லவே இல்லை. இயற்கை மற்றும் சாகசத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு பீம்டாலில் அனுபவிக்க பல விஷயங்கள் உள்ளன.

ஏரிக்காக பீம்டாலைப் பார்வையிடவும்

மலை நகரமான பீம்டால் அழகிய ஏரியைக் கொண்டுள்ளது. ஐந்து பாண்டவர்களில் ஒருவரான பீமன், வனவாசத்தின் போது இங்கு வந்து இந்த ஏரியை உருவாக்கியதாகக் கூறப்படும் புராணத்தின் மூலம் இந்த ஏரிக்கு அதன் பெயர் வந்தது.

பீமேஷ்வர் மகாதேவ் கோவில்

பீமனால் கட்டப்பட்டதாக நம்பப்படும் பீமேஷ்வர் மகாதேவ் கோவில் சிவனுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் பல யாத்திரீகர்களுக்கு புனித யாத்திரை மையமாக இருந்து வருகிறது.

பீம்டாலில் படகு சவாரி

ஏரிக்கு படகு சவாரி மூலமும் செல்லலாம். இந்த ஏரி அமைதியான, பசுமையான சுற்றுச்சூழலை கொண்டுள்ளது. இதனை படகு சவாரி மூலம் அனுபவிக்கலாம்.

ஆண்டு முழுவதும் இதமான காலநிலை

கோடை நாட்களில் மிதமான காலநிலையையும், குளிர்காலத்தில் தாங்கக்கூடிய குளிர்ச்சியையும் பீம்டாலில் சுற்றுலா பயணிகள் அனுபவிக்க முடியும்.

ஆண்டு முழுவதும் இங்கு காலநிலை இதமானதாக இருப்பதால் பார்வையாளர்கள் இந்த நகரத்திற்கு அதிகம் வருகை தருகின்றனர்.

சுற்றிலும் அமைதியான சூழல்

பிம்டால் நைனிடாலில் இருந்து 24 கிமீ தொலைவில் உள்ளது. தூரம் மிகக் குறைவாக இருந்தாலும், அமைதியின் அடிப்படையில் இந்த இரண்டு இடங்களுக்கும் வித்தியாசம் மிகப் பெரியது. பீம்டால் நைனிடாலை விட அமைதியான சுற்றுச்சூழலை வழங்குகிறது. அமைதியை விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த ஸ்பாட் என்றே சொல்லலாம்.

பறவைகளின் சொர்க்கம்

பீம்டாலைச் சுற்றியுள்ள காடுகள் பலவகையான பறவை இனங்களுக்கு தாயகமாக இருப்பதால், பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு இது ஒரு சொர்க்கமாக உள்ளது.

Bhimtal should be on your winter travel wishlist; here's why
குரங்கு நீர்வீழ்ச்சி: இதை Monkey Falls என்றழைப்பது ஏன்? கோவையில் ஒரு சூப்பர் ஸ்பாட்!

உள்ளூர் கலாச்சாரம்

இந்த நகரம் குமாவோனி கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது. உள்ளூர் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் காண அருகிலுள்ள கிராமங்களுக்குச் செல்லுங்கள், அங்கு இருக்கும் பாரம்பரிய குமாவோனி உணவு வகைகளை சுவைக்க மறந்துவிடாதீர்கள்.

சாகசம்

பீம்டாலுக்கு ஏரி மற்றும் கோவிலை மட்டும் பார்க்க சுற்றுலா பயணிகள் வருவதில்லை. இங்கு பாராகிளைடிங்கும் உண்டு! சாகச விரும்பிகள் இந்த இடத்திற்கு சென்று தனித்துவமான அனுபவத்தை பெறலாம்.

Bhimtal should be on your winter travel wishlist; here's why
சென்னை: ஒரு நாளில் சுற்றி பார்க்க ஒரு பட்ஜெட் ஸ்பாட் - Madras Museum போயிட்டு வரலாமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com