ராகுல் காந்தி தெறி பேச்சு : “நானும் தமிழன்; பாஜகவால் ஒரு போதும் தமிழ்நாட்டை ஆள முடியாது"

“இது ஒன்றும் மன்னராட்சி கிடையாது. உங்களால் எந்த காலத்திலும் தமிழ்நாட்டு மக்களை ஆட்சி செய்யவே முடியாது. நீங்கள் ஒன்றும் மன்னர் இல்லை. நீட் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நீங்கள் செவி கொடுக்கவில்லை.
Rahul Gandhi

Rahul Gandhi

NewsSense

Published on

பாஜக அரசால் தமிழகத்தை எப்போதும் ஆளவே முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மிக காட்டமாக பேசியிருக்கிறார்.

கூட்டாட்சி தத்துவம்

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, “இரண்டு வகையான இந்தியா உள்ளது. ஒன்று, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பது. அதாவது, பேச்சுவார்த்தை நடத்துவது, உரையாடுவது. பரஸ்பரம் குறைகளை கேட்பது

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சகோதரனிடம் சென்று உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறேன். அவர் தனக்கு இதுதான் வேண்டும் என்கிறார். அவர் எனக்கு என்ன வேண்டும் என என்னிடம் கேட்கிறார். நான் எனக்கு இது வேண்டும் என்கிறேன். இது ஒரு கூட்டாட்சி,” என்றார்.

<div class="paragraphs"><p>Modi</p></div>

Modi

NewsSense

இது ஒன்றும் மன்னராட்சி அல்ல

“இது ஒன்றும் மன்னராட்சி கிடையாது. உங்களால் எந்த காலத்திலும் தமிழ்நாட்டு மக்களை ஆட்சி செய்யவே முடியாது. நீங்கள் ஒன்றும் மன்னர் இல்லை. நீட் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நீங்கள் செவி கொடுக்கவில்லை.

பெகாசஸ் என்பது மக்களை தாக்குகிறது. பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்று பெகாசஸை அங்கீகரிக்கும்போது அவர் தமிழ்நாட்டு மக்களையும், அசாம் மக்களையும் தாக்குகிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

<div class="paragraphs"><p>Rahul Gandhi</p></div>

Rahul Gandhi

NewsSense

நானும் தமிழன்தான்

தமிழகத்தை அடிக்கடி குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசியது தமிழகத்தில் கவனத்தை ஈர்த்தது. இந்த காணொளி வைரலாக பரவி வருகிறரது.

நாடாளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி வெளியே வந்தபோது அவரிடம் ஒருவர், “எதற்கு உங்கள் பேச்சில் தமிழ்நாட்டிற்கு இத்தனை முக்கியத்துவம்?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “நானும் தமிழன்தானே” என சிரித்தபடியே கூறினார்.

இந்த க்ளிப்பிங்கை பலர் ஷேர் செய்து வருகின்றனர்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com