சனாதனம் குறித்து இந்தியில் பதிவிட்ட பாஜக - அமைச்சர் உதயநிதியின் ரிப்ளை வைரல்!

பாஜகவின் இந்த பதிவுக்கு, ‘இந்தி தெரியாது போடா’ என்ற வசனம் உள்ள டி-சர்ட் அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு உதயநிதி ஸ்டாலின் பதில் கொடுத்திருந்தார்.
சனாதனம் குறித்து இந்தியில் பதிவிட்ட பாஜக - அமைச்சர் உதயநிதியின் ரிப்ளை வைரல்!
சனாதனம் குறித்து இந்தியில் பதிவிட்ட பாஜக - அமைச்சர் உதயநிதியின் ரிப்ளை வைரல்!Twitter
Published on

அயோத்தியில் இன்று ராமர் சிலை பிரான் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

இந்த விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் திரை பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் இந்த விழா குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் பேசியிருந்தார். "ராமர் கோயில் திறப்புக்கு நாங்கள் எதிரி அல்ல, ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் திமுகவுக்கு உடன்பாடில்லை" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் நேற்று உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை பதிவிட்டு, “இந்த அநியாயக்காரர்களை அடையாளம் காணுங்கள். ராமர் கோயிலை எதிர்த்து, சனாதன தர்மத்தை அவமதிக்கிறார்கள்.” என்று இந்தியில் பதிவிட்டிருந்தனர்.

பாஜகவின் இந்த பதிவுக்கு, ‘இந்தி தெரியாது போடா’ என்ற வசனம் உள்ள டி-சர்ட் அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு உதயநிதி ஸ்டாலின் பதில் கொடுத்திருந்தார்.

சனாதனம் குறித்து இந்தியில் பதிவிட்ட பாஜக - அமைச்சர் உதயநிதியின் ரிப்ளை வைரல்!
சனாதன ஒழிப்பு: "அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கணும்" நீதிபதிக்கு உதயநிதி பதில்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com