Exit Polls 2022 results : உத்தரபிரதேசத்தில் பாஜக, பஞ்சாபில் ஆம் ஆத்மி மற்ற மாநில முடிவுகள்

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து விட்டன. வரும் மார்ச் 10 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது
Uttar Pradesh

Uttar Pradesh

Twitter

Published on

இந்நிலையில் நேற்று மாலையில் எக்சிட் போல் எனும் வாக்குச்சாவடியில் வாக்களித்தோரிடம் எடுக்கப்பட்ட கணிப்புகள் வெளியாகின. இருப்பினும் எக்சிட் போல் அப்படியே தேர்தல் முடிவுகளை பிரதிபலிக்க வேண்டுமென கட்டாயமில்லை. இதையும் கடந்த கால வரலாற்றில் பார்த்திருக்கிறோம். அதை மனதில் கொண்டு இதைப் பார்க்கலாம்.

அனைத்து சானல்களின் சராசரியின்படி Poll of Polls கணிப்பில் உத்திரப்பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகளில் அறுதிப் பெரும்பான்மை பெற 202 இடங்கள் வேண்டும். அதில் பாஜக கூட்டணி 242 தொகுதிகள் பெறுமென கணிக்கப்பட்டிருக்கிறது. சமாஜ்வாதி கணிசமான தொகுதிகள் பெற்றிருந்தாலும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி மற்றும் ஓரளவு காங்கிரசுக் கட்சிகள் வாக்குகளை பிரித்திருக்கும் என்பதால் பாஜக முன்னிலை வகிக்கிறது.

பஞ்சாப்பில் மொத்த இடங்கள் 117. அறுதிப் பெரும்பான்மை 59. அறுதிப் பெரும்பான்மையை விட கூடுதலாக பெற்று ஆம் ஆத்மி 63 இடங்கள் பெறுகிறது. இரண்டாவதாக காங்கிரசு வருகிறது. பாஜக படுதோல்வி அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாவில் மொத்த இடங்கள் 40. அறுதிப் பெரும்பான்மை 21. இங்கு அனைத்துக் கணிப்புகளின் படி காங்கிரசு மற்றும் பாஜக இரண்டுமே தலா 16 இடங்கள் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி மற்றவர்கள் ஆட்சியமைப்பதை தீர்மானிப்பார்கள். ஏற்கனவே உள்ள அனுபவத்தின் படி அந்த மற்றவர்கள் பாஜக விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கலாம். அல்லது காங்கிரசு அறுதிப்பெரும்பான்மையும் பெறலாம்.

மணிப்பூரில் மொத்த இடங்கள் 60. அறுதிப் பெரும்பான்மை 31. கணிப்புகளின் சராசரசியின் படி பாஜக 30 இடங்கள் பெறுகிறது. எனவே இங்கும் மற்றவர் ஆதவரவைப் பெற்று பாஜக ஆட்சி அமைக்கலாம்.

உத்தர்காண்டின் மொத்த தொகுதிகள் 70. அறுதிப் பெரும்பான்மை 36. சராசரி கணிப்பின் படி பாஜக 35 இடங்கள் பெறுகின்றது. இங்கும் காங்கிரசு மற்றும் பாஜகவிற்கு கடுமையான போட்டி இருக்கிறது. சில கணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறுமென கூறுகிறது. அதுவும் பெரும்பான்மைக்கு பக்கத்தில் உள்ள எண்ணிக்கைதான்.

மற்றபடி மார்ச் 10 ஆம் தேதி உண்மை நிலவரம் தெரிந்து விடும். உபி, பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் குதிரைப் பேரம் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதையும் தாண்டி பல வாக்குபதிவுகளுக்கு பிந்தைய கணிப்பு பல தேர்தல்களில் தவறாக இருந்திருக்கிறது. இதன் படி உண்மையான வெற்றி என்பது மார்ச் 10 அன்றுதான் தெரியும்.

உத்திரப் பிரதேசம்

உத்திரப் பிரதேசம்

Facebook

1. உத்திரப் பிரதேசம்

மொத்தத் தொகுதிகள் 403. அறுதிப் பெரும்பான்மை 202

டைம்ஸ் நவ் வீட்டோ கணிப்பின் படி பாஜக 225 தொகுதிகளயும், சமாஜ்வாதிக் கட்சி 151 தொகுதிகளையும் பிஎஸ்பி கட்சி 14ம், மற்றவர்கள் 13ம் பெறுவதாக கணிக்கின்றன.

இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பின் படி பாஜக-விற்கு 288 முதல் 326 தொகுதகளும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு 71 முதல் 101 தொகுதிகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 3 முதல் 9 தொகுதிகளும் மற்றவருக்கு 3 முதல் 6 வரையிலும் தொகுதிகள் கிடைக்கலாம்.

எபிபி நியூஸ் சி வோட்டர் எக்சிட் போல் படி பாஜகவிற்கு 228 முதல் 224 தொகுதிகளும், சமாஜ்வாதி கட்சிக்கு 132 முதல் 148 தொகுதிகளும், பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு 13 முதல் 21 வரையிலும், மற்றவருக்உ 6 முதல் 8 வரையிலான தொகுதிகளும் கிடைக்கலாம். கிடைக்கலாம்.

டுடேஸ் சாணக்கிய எக்சிட் போல் படி பாஜகவிற்கு 294 தொகுதிகளும், சமாஜ்வாதி கட்சிக்கு 105 தொகுதிகளும் பெறலாம். மாயாவதியின் பிஎஸ்பி கட்சிக்கு 2ம், காங்கிரசு கட்சிக்கு ஒன்றும் கிடைப்பதாக இந்த எக்சிட் போல் கூறுகிறது.

ரிபப்ளிக் - பி மார்க் எக்சிட் போல் படி பாஜகவிற்கு 240, சமாஜ்வாதி 140 பிஎஸ்பி 17 மற்றவர்களுக்கு 4ம் கிடைக்கலாம்.

பஞ்சாப்

பஞ்சாப்

Facebook

2. பஞ்சாப்

மொத்தத் தொகுதிகள் 117. அறுதிப் பெரும்பான்மை 59.

இந்தியா டுடே மை ஆக்சிஸ் படி, காங்கிரஸ் 19 -31, ஆம் ஆத்மி 76 -90, அகாலிதள் 7 -11, மற்றவர்களுக்கு 1 -4 தொகுதிகள் கிடைக்கலாம்.

ஏபிபி நியூஸ் சி வோட்டர் படி காங்கிரசுக்கு 22 -28, ஆம் ஆத்மி 51 -61, அகாலி தள் கூட்டணிக்கு 20 -26, மற்றவருக்கு 8 -14 தொகுதிகள் கிடைக்கும்.

டைம்ஸ் நவ் - வீட்டோ எக்சிட் போல் படி ஆம் ஆத்மி கட்சிக்கு 70 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு 22 தொகுதிகளும், அகாலி தள் கட்சிக்கு 19ம், மற்றவருக்கு 6-ம் கிடைக்கலாம்.

நியூஸ் 24 -டுடே சாணக்கியா போல்படி ஆம் ஆத்மிக்கு 89 - 111 தொகுதிகளும், காங்கிரசிற்கு 3 - 17 தொகுதிகளும், சிரோண்மணி அகாலிதள் கட்சிக்கு 1 -11ம் மற்றவருக்கு 0 - 2 தொகுதி மட்டுமே கிடைக்கும்.

ரிபப்ளிக் பி மார்க் எக்சிட்போல் படி காங்கிரசுக்கு 21 -31, ஆம் ஆத்மிக்கு 62 -70, அகாலிதள் கூட்டணிக்கு 16 -24, மற்றவருக்கு 1 -3 தொகுதிகள் கிடைக்கலாம்.

Uttar Pradesh

கோகுல்ராஜ் கொலை வழக்கு : யுவராஜ் உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் உத்தரவு

உத்தர்காண்ட்

உத்தர்காண்ட்

Twitter

3. உத்தர்காண்ட்

மொத்தத் தொகுதிகள் 70. அறுதிப் பெரும்பான்மை 36

இந்தியா டுடே மை ஆக்சிஸ் கணிப்பின்படி, பாஜக 36 -46, காங்கிரஸ் 20 -30, மற்றவர்களுக்கு 4 -9 தொகுதிகள் கிடைக்கலாம்.

ஏபிபி நியூஸ் சி ஓட்டர் கணிப்பின் படி பாஜக 26 -32, காங்கிரஸ் 32 -38, ஆம் ஆத்மி 0 -2, மற்றவர்களுக்கு 3 -7 தொகுதிகள் கிடைக்கும்.

டைம்ஸ் நவ் வீட்டோ கணிப்பின் படி பாஜகவிற்கு 37, காங்கிரஸ் 31, ஆம் ஆத்மி 1, மற்றவர்களுக்கு 1 கிடைக்கும்.

நியூஸ் 24 டுடே சாணக்கியா கணிப்பில் பாஜக 43, காங்கிரஸ் 24, ஆம் ஆத்மி 0, மற்றவர்களுக்கு 3 கிடைக்கும்.

ரிபப்ளிக பி மார்க் கணிப்பில் பாஜக 29 -34, காங்கிரஸ் 33 -37, ஆம் ஆத்மி 1 -3, மற்றவர்களுக்கு 1 -3 கிடைக்கும்.

Uttar Pradesh

Women's Day : பட்சி, மனிதி, மாயவிசை பெண்களுக்கான பாடல்கள் | Motivational

கோவா

கோவா

Facebook

4. கோவா

மொத்தத் தொகுதிகள் 40. அறுதிப் பெரும்பான்மை 21

இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பில் பாஜக 14 – 18, காங்கிரஸ் 15 -20, மற்றவர்களுக்கு 2 – 9 கிடைக்குமென கூறப்படுகிறது.

இந்தியா நியூஸ் ஜான் கி பாத் கணிப்பில் பாஜக 13 -19, காங்கிரஸ் 14 -19, ஆம் ஆத்மி 3 -5, மற்றவர்களுக்கு 1 -3 கிடைக்கலாம்.

ஏபிபி நியூஸ் சி ஓட்டர் கணிப்பில் பாஜக 13 -17, காங்கிரஸ் 12 -16 மற்றவர்கள் 5 -11 தொகுதிகள் பெறலாம்.

டைம்ஸ் நவ் வீட்டோ கணிப்பில் பாஜக 14, காங்கிரஸ் 16, ஆம் ஆத்மி 4, மற்றவர் 6 பெறலாம் என கூறப்படுகிறது

ரிபப்ளிக் பிமார்க் கணிப்பில் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் தலா 13 -17, ஆம் ஆத்மி 2 -6, மற்றவர்கள் 2 -4 தொகுதிகள் கிடைக்கும்.

மணிப்பூர்

மணிப்பூர்

Twitter

5. மணிப்பூர்

மொத்தத் தொகுதிகள் 60. அறுதிப் பெரும்பான்மை 31

இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பில் மணிப்பூர் முற்போக்கு மதச்சார்பின்மை கூட்டணி (MPSA) 4- 8, பாஜக 33 -43, என்பிபி 4 -8 மற்றவர்களுக்கு 6 -15 கிடைக்கும்

இந்தியா நியூஸ் ஜான் கி பாத் கணிப்பில் எம்பிஎஸ்ஏ 14 -10, பாஜக 23 -28, என்பிபி 7 -8, கிடைக்குமென கூறப்படுகிறது.

ஏபிபி நியூஸ் சிவோட்டர் கணிப்பில் எம்பிஎஸ்ஏ 12 -16, பாஜக 23 -27, என்பிபி 10 -14, மற்றவர் 3 -7 இடக்கும் கிடைக்கலாம்.

டைம்ஸ் நவ் வீட்டோ கணிப்பில் எம்பிஎஸ்ஏ 4 -8, பாஜக 33 -43 என்எஸ்பி 4 -8, மற்றவர் 4 -8 தொகுதிகள் கிடைக்கும்

ரிபப்ளிக் பிமார்க் கணிப்பில் ஏம்பிஎஸ்பி 11 -17, பாஜக27 -31, என்எஸ்பி 6 -10, மற்றவர்களுக்கு 3 -7 தொகுதிகள் கிடைக்கும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com