எல்லை சுற்றுலா: இந்தியா - சீனா எல்லையில் 17 கிராமங்களை சுற்றலாம் - விரிவான தகவல்கள்

இதற்காக இமாச்சல பிரதேசம், லடாக், சிக்கிம், உத்தராகண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் உள்ள 17 கிராமங்களை அரசு தேர்வு செய்துள்ளது.
எல்லை சுற்றுலா: இந்தியா - சீனா எல்லையில் 17 கிராமங்களை சுற்றலாம் - விரிவான தகவல்கள்
எல்லை சுற்றுலா: இந்தியா - சீனா எல்லையில் 17 கிராமங்களை சுற்றலாம் - விரிவான தகவல்கள்canva
Published on

வித்தியாசமான இடங்களுக்கு சுற்றுலா செல்வது ஒரு சிலருக்கு பிடித்தமானதாக இருக்கும். அதிக சுற்றுலாப்பயணிகளால் கூட்டமாக இருக்கும் இடங்கள் சிலருக்கு ஒவ்வாமையைத் தரலாம். 

கொடைக்கானலுக்கு சென்று ஏரி, பூங்காக்களை பார்க்காமல் அருகில் இருக்கும் வெள்ளகவி போன்ற கிராமங்களை அனுபவிப்பது மகிழ்ச்சியானதாக இருக்கும். 

இது போல கிராமங்களைத் தேடி பயணிப்பது உங்களுக்கு பிடித்தமான விஷயமாக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான். 

கிராமம் என்றால் சென்னைக்கு வெளியில் இருக்கும் சிறிய ஊர் போல அல்ல, இந்தியா - சீனா எல்லையில் உள்ள கிராமங்களை சுற்றுலாத்தளமாக மாற்ற இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக இமாச்சல பிரதேசம், லடாக், சிக்கிம், உத்தராகண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் உள்ள 17 கிராமங்களை அரசு தேர்வு செய்துள்ளது.

இந்த 17 கிராமங்களிலும் சாகச சுற்றுலாக்கள் மற்றும் ஹோம்ஸ்டேக்களை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், லடாக்கில் உள்ள சுஷுல் (Chushul) மற்றும் கோர்சோக் (Korzok) என்ற கிராமமும் சுற்றுலாத்தளமாக வளர்ச்சியடையப் போகிறது.

இமாச்சல பிரதேசத்தில் கிபு (Gipu), லாலங் (Lalung), சரங் காஸ் (charang Khas),

உத்தரகாண்டில் நிடி (Niti), மனா(Mana), மலரி(Malari), குஞ்சி(Kunji), சிக்கிமில் லச்சென் (Lachen), ஞாதாங் (Gnathang), லச்சங் (Lachung). அருணாச்சல பிரதேசத்தில் செமிதாங் (Zemithang), டுடிங் (Tuting), டக்சிங் (Taksing), கிபிதோ (Kibithoo).

எல்லை சுற்றுலா: இந்தியா - சீனா எல்லையில் 17 கிராமங்களை சுற்றலாம் - விரிவான தகவல்கள்
ஜம்மு காஷ்மீர்: கோடைகாலத்தில் மிரட்டும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகள் சொல்வதென்ன?

மேலும் இதற்காக உத்தரகண்டில் 120 ஹோம்ஸ்டேக்கள் புதுப்பிக்கப்பட உள்ளன.  மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற வேலைகள் நடைபெறுகின்றன. 

இந்த கிராமங்களுக்கான மலையேற்ற பாதைகளையும் உருவாக்க உள்ளனர். ஐஸ் ஸ்கேட்டிங், ரிவர் ராஃப்டிங், பனிச்சறுக்கு ஆகிய சாகச விளையாட்டுக்களையும் தொடங்கவுள்ளனர். 

சுற்றுலாப் பயணிகளின்  வசதிக்காக குடிநீர், எல்லா பருவங்களிலும் வருவதற்கான சாலை வசதி, மொபைல் நெட்வொர்க், மின்சாரம் மற்றும் இணையதளம் போன்ற வசதிகளை மேம்படுத்த உள்ளனர்.

எல்லை சுற்றுலா: இந்தியா - சீனா எல்லையில் 17 கிராமங்களை சுற்றலாம் - விரிவான தகவல்கள்
தேசாந்திரியின் தடங்கள் : நார்வே-சுவீடன் எல்லை – வடதுருவ ஒளியை தேடி நள்ளிரவு உலா! – பகுதி 7

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com