குருக்ராம் நகரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னைத் தானே வாடகைக்கு விட்டுள்ளார். இதற்கு அவர் சொல்லும் காரணம் நம் மனதை நெகிழச் செய்கிறது
உலகெங்கிலும் இன்று, பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக காதலர்கள் தங்கள் இணைகளுக்காக, இணைகளுடன் இந்த நாளை கொண்டாட பல பிளான்களை செய்து வருவர்.
இன்னொரு பக்கம் சிங்கிளாக இருப்பவர்கள் வழக்கம்போல மீம் உலகில் மூழ்கியிருப்பார்கள். இது ஒரு புறம் நகைச்சுவையான ஒன்றாக இருந்தாலும், இதன் பின்னால் உளவியல் ரீதியாக இருக்கும் ஒரு விஷயத்தையும் நாம் கவனிக்கவேண்டும்.
பலர் நிஜமாகவே காதலிக்காமல் சிங்கிளாக இருக்கலாம், ஒரு சிலர் தங்கள் காதலர்களை பிரிந்திருக்கலாம். இவர்களில் எத்தனைப் பேர் தனிமையில் வாடுகிறார்கள் என்பது நமக்கு தெரியாது.
இதனால், ஒரு வேளை யாரேனும் இப்படி தனிமையில் அவதிப்படுகிறார்கள் என்றால், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு தோளாக நான் இருப்பேன் என்று கூறுகிறார் குருக்ராமை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
ஷகுல் குப்தா என்ற 31 வயது இளைஞர் இதற்காக தன்னை தானே வாடகைக்கு விடுகிறார். இது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஷகுல்.
வணிக ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ இதனை தான் செய்யவில்லை என்று குறிப்பிட்ட ஷகுல், "நீங்கள் தனிமையாக உணர்ந்தாலோ அல்லது ஒரு தோழமை தேவைப்பட்டாலோ, என்னை வாடைக்கு எடுப்பதில் கூச்சம், வெட்கம் கொள்ளவேண்டாம். நான் உங்களின் சிறந்த டேட்டாக இருப்பேன்
கடந்த 2018 முதல் இந்த சேவையை அவர் செய்துவருகிறார்.
“ஜோடிகள் தங்களுக்குள் ஐ லவ் யூ சொல்லிக்கொள்வதை கேட்கும்போது எரிச்சலாக இருக்கும். என் இயலாமையை குறிப்பது போல, நான் வேண்டாதவனாக அது உணரச்செய்யும். இதனால் தோன்றிய தனிமை தான் இந்த வாடகை காதலானாக இருக்க என்னை தூண்டியது.” என்கிறார் ஷகுல்.
இவர் இதுவரை 50 பெண்களுக்கு மேல் டேட் செய்திருக்கிறார். வேலண்ட்டைன்ஸ் டே அன்றைக்கு மட்டும் இவர் தன்னை வாடகைக்கு விடுவதில்லை. மற்ற நாட்களிலும் தேவைகள் இருந்தால் வாடகை பாய்ஃபிரண்டாகவோ, தோழனாகவோ இருக்கிறார்.
தான் உடன் செல்லும் பெண்களுடன் நீண்ட நேரம் கதைப்பது தனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்கிறார் ஷகுல்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust