பட்ஜெட் 2022-23 : லைவ்வாக மொபைலில் பார்ப்பது எப்படி?

மத்திய அரசின் இணையதளத்திலும் தரவிறக்க முடியும். இந்த செயலி மூலம் பட்ஜெட் உரை, வருடாந்திர அறிக்கை, மானியங்களுக்கான கோரிக்கை, நிதி மசோதா மற்றும் 14 இதர அம்சங்களை அணுக முடியும்.
நிர்மலா சீத்தாராமன்

நிர்மலா சீத்தாராமன்

Twitter

Published on

கடந்த ஆண்டில் தான் முதன் முதலாக நாடாளுமன்றத்தில் காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல இம்முறையும் புதுமையான நடவடிக்கை ஒன்றை மத்திய அரசு எடுத்திருக்கிறது. அது தான் மொபைலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிகழ்வு மற்றும் விவாதங்களை நேரலையில் பார்க்கும் வசதி. அதைப்பற்றி முழுதாக அறிந்துகொள்ளும் முன்னர், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஒன்றிய பட்ஜெட் செயலியைக் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த செயலியின் மூலம் பட்ஜெட் ஆவணங்களை பிடிஎஃப் வடிவில் படித்துக்கொள்ள முடியும்.Union Budget எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி, கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் கிடைக்கும். இதனை மத்திய அரசின் ( https://www.indiabudget.gov.in/ ) இணையதளத்திலும் தரவிறக்க முடியும். இந்த செயலி மூலம் பட்ஜெட் உரை, வருடாந்திர அறிக்கை, மானியங்களுக்கான கோரிக்கை, நிதி மசோதா மற்றும் 14 இதர அம்சங்களை அணுக முடியும்.

<div class="paragraphs"><p>பட்ஜெட் கூட்டத் தொடர்&nbsp;</p></div>

பட்ஜெட் கூட்டத் தொடர் 

Twitter

மத்திய அரசின் பட்ஜெட் இணையதளத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் மற்றும் நிகழ்வுகளை நேரலையாகக் காணலாம். இணையதளத்தின் முகப்பு பக்கத்திலேயே வீடியோக்கான வசதி இருக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் தினம் நேற்று தொடங்கியதை அடுத்து, இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன். இது அவர் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும். கொரோனா இழப்பு, மற்றும் பல பொருளாதார இழப்புகளுக்குப் பின்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதனால் இந்த பட்ஜெட் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிகழ்வுகளை நியூஸ்சென்ஸ் வலைதளங்களிலும் நேரலையாக காண முடியும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com