Budget 2024 Live: Nirmala Sitharaman Presents Interim Budget
Budget 2024 Live: Nirmala Sitharaman Presents Interim BudgetTwitter

Budget 2024 : வருமான வரி விகிதத்தில் மாற்றமா? நிதியமைச்சர் நிர்மலா விளக்கம்

நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோது ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய புறப்பட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் உரையை தொடங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

"கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. பாஜகவுக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என நம்பிக்கை உள்ளது" - நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை

வாரிசு அரசியலுக்கும் எதிராக போராடி வருகிறோம்

"விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம்" - நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை

"கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்"

நாட்டில் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது

"வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு

"இந்தியாவில் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை 80-ஆக அதிகரிப்பு" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

"அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

“ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும்” - நிர்மலா சீதாராமன்

நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோது ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

"தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ₹1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்" -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

“வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்” -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும்

நிதி பற்றாக்குறை - 5.8%

திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடு ₹27.56 லட்சம் கோடி.

நிதி பற்றாக்குறை - 5.8%

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

40,000 சாதாரண ரயில் பெட்டிகள் ‘வந்தே பாரத்’ தரத்தில் புதுப்பிக்க திட்டம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

"இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் அனைத்தையும் அறிவிக்க முடியாது. அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரை நாட்டை நடத்த இடைக்கால பட்ஜெட் உதவும்"

மக்கள் தொகையால் ஏற்படும் சவால்

"வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகையால் ஏற்படும் சவால்களை கண்டறிய உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும்

"9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும்"

ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி - நிர்மலா சீதாராமன்

logo
Newssense
newssense.vikatan.com