1500 ஆண்டுகள் பழமையான சிலையை பார்க்க குவியும் சுற்றுலா பயணிகள் - எங்கே இருக்கிறது?

ஏறக்குறைய ஒன்றரை வருட கால அவகாசம் எடுத்து நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பிறகு, மிகப்பெரிய தேக்கு மரக் கட்டைக் கொண்ட ஒரு கட்டமைப்பை உருவாக்க அவர்கள் முதலில் பர்மா அரசாங்கத்திடம் அனுமதி பெற்றனர்.
This 21-feet-Lord Sri Anantha Padmanabhaswamy Idol Is A Hit Among Tourists
This 21-feet-Lord Sri Anantha Padmanabhaswamy Idol Is A Hit Among TouristsTwitter
Published on

1500 ஆண்டுகள் பழமையான தேக்கு மரத்தில் செதுக்கப்பட்ட 21 அடி நீள ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி சிலையை பார்க்க ஹைதராபாத்துக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கட்டமைப்பை உருவாக்கியவர்களின் கூற்றுப்படி, சதலவாடா வெங்கடேஸ்வர ராவ் தனது சகோதரர் திருப்பதி ராவுடன் பர்மாவில் (மியான்மர்) நடைபெற்ற சர்வதேச ஏலத்தில் தேக்கு மரத்தை வாங்கினார். அங்கு 40 நாடுகளைச் சேர்ந்த ஏலதாரர்கள் பங்கேற்றனர்.

இருவரும் பின்னர் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு மரத்தை விற்றனர். ஆனால் நிறுவனம் தள ஆய்வுக்காக இந்தியாவுக்குச் செல்ல முடியாததால் வேறு சில நோக்கங்களுக்காக மரத்தைப் பயன்படுத்தச் சொன்னது.

பின்னர் சதலவாடா சகோதரர்கள் இந்த மரத்தை வருங்கால சந்ததியினருக்கு ஒரு கட்டமைப்பு வடிவில் வைக்க நினைத்தனர். அதன்படி பத்மநாபசுவாமியின் சிலையை செதுக்க முடிவு செய்தனர்.

ஏறக்குறைய ஒன்றரை வருட கால அவகாசம் எடுத்து நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பிறகு, மிகப்பெரிய தேக்கு மரக் கட்டைக் கொண்ட ஒரு கட்டமைப்பை உருவாக்க அவர்கள் முதலில் பர்மா அரசாங்கத்திடம் அனுமதி பெற்றனர்.

பின்னர் இருவரும் பர்மாவில் உள்ள மரம் செதுக்கும் கலைஞர்களை அணுகினர். அங்கு 30 கலைஞர்கள் ஆறு வருடங்கள் கடினமாக உழைத்து, மரத்திற்கு தெய்வீக வடிவத்தை வழங்கினர்.

This 21-feet-Lord Sri Anantha Padmanabhaswamy Idol Is A Hit Among Tourists
திருப்பதி : கருவறை மையத்தில் சிலை இல்லையா? பாலாஜி கோவில் குறித்த 5 ரகசியங்கள்!

பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 70,000 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்தனர்.

“கடவுள் அனந்த பத்மநாப சுவாமியின் கட்டமைப்பை உருவாக்குவதற்குப் பின்னால் இயந்திரங்கள் எதுவும் இல்லை. கட்டமைப்பிற்கான எந்த திட்டமும் எங்களிடம் இல்லை. நாங்கள் தெய்வீக சக்தியால் இயக்கப்படுகிறோம்" என்று கட்டமைப்பை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள சரத் பாபு கூறுகிறார்.

இந்த சிலை அமைப்பு அதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து பக்தர்கள் மத்தியில் பிரபலமான தளமாக மாறியது.

This 21-feet-Lord Sri Anantha Padmanabhaswamy Idol Is A Hit Among Tourists
வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட விநாயகி சிலை - ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com