75வது சுதந்திர தினவிழா : ரஜினிகாந்த் டு மாதவன் - வீட்டில் தேசிய கொடி ஏற்றிய பிரபலங்கள்

பிரதமர் மோடி 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அறிவித்திருந்த ஹர் கர் திரங்கா (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி)யின் பாகமாக, நடிகர்கள் ரஜினிகாந்த், அமீர்கான், மோகன்லால் ஆகியோர் தங்களது வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்றியுள்ளனர்.
National Flag
National FlagTwitter
Published on

75வது ஆண்டு சுதந்திர தின விழாவை செழிப்பாக கொண்டாவேண்டி, இந்திய அரசு பல ஏற்பாடுகளை செய்துவருகிறது. ஆகஸ்ட் 13 முதல் சமூக வலைத்தளங்களில் ஒரே புகைப்படம் வைக்க வேண்டும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றவேண்டும் என மக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்தியாவில் கோடி கணக்கில் தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணிகளும் ஆயத்தமாயின. நடிகர்கள் ரஜினிகாந்த் முதல், மோகன்லால், ஜெயராம், அமீர்கான் வரை அனைவரும் அவர்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி, அவர்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் டிஸ்பிளே பிக்சரை மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - "சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஜாதி, மத, கட்சி வேறுபாடின்றி, நம் வருகால சந்ததியினரின் கைகளால் தேசியக் கொடியை பறக்கவிடுவோம்"

நடிகர் மோகன்லால், "இந்தியா முழுவதும் கொண்டாடிவரும் 75வது சுதந்திர தின விழாவின் ஒரு பங்காக நானும் இருப்பதில் பெரு மகிழ்ச்சி"

நடிகர் ஜெயராம் தனது வீட்டின் முன்பு ஏற்றப்பட்ட தேசிய கொடியை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்

பாலிவுட் நடிகர் அமீர் கானின் வீட்டில் ஏற்றப்பட்டுள்ள தேசியக் கொடி

விவேக் அக்னிஹோத்ரி

நடிகர் நீல் நிதின் முகேஷ்

நடிகர் மாதவன், "ஒவ்வொரு வீட்டிலும் நம் தேசியக்கொடி பறக்கட்டும்"

பாலிவுட் நடிகர் ஷா ருக் கான் - "என் வீட்டிலிருக்கும் இளம் தலைமுறைக்கு நமது நாட்டின் உன்னதத்தையும், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களையும் கற்றுக்கொடுத்தேன்...இன்னும் நிறைய சொல்லித் தர வேண்டும்"

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com