Chandrayaan 3: சரித்திரம் படைத்த இந்தியா - நிலவில் கால் பதித்தது விக்ரம் லேண்டர்

மாலை 5.20 மணி முதல் நேரலை தொடங்கிய நிலையில், சரியாக 6.04 மணிக்கு நிலவில் கால் பதித்தது விண்கலம். இதற்கு முன்னர் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள் நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளது. ஆனால், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய நாடு இந்தியா தான்.
Chandrayaan 3: சரித்திரம் படைத்த இந்தியா - நிலவில் கால் பதித்தது விக்ரம் லேண்டர்
Chandrayaan 3: சரித்திரம் படைத்த இந்தியா - நிலவில் கால் பதித்தது விக்ரம் லேண்டர்twitter
Published on

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான் 3 விண்கலம். இதன் மூலம் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற வரலாற்று சாதனை படைத்து இந்தியா.

கடந்த ஜூலை 14ஆம் தேதி பூமியில் இருந்து புறப்பட்ட சந்திரயான் 3 ஒரு மாதக் காலத்திற்கு பிறகு வெற்றிகரமாக நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்தது.

இஸ்ரோ விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை நேரலையாக ஒளிபரப்பியது.

மாலை 5.20 மணி முதல் நேரலை தொடங்கிய நிலையில், சரியாக 6.04 மணிக்கு நிலவில் கால் பதித்தது விண்கலம்.

இதற்கு முன்னர் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள் நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளது. அந்த வரிசையில் இந்தியா நான்காவது நாடாக இணைந்துள்ளது.

ஆனால், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய நாடு இந்தியா தான்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளதால், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் காணொளி வாயிலாக பங்கேற்றார்.

இந்த மிஷனை வெற்றிகரமாக முடித்த விஞ்ஞானிகளை வாழ்த்திய பிரதமர் மோடி, இந்த தருணம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது எனவும், காலங்கள் கடந்து இந்தியாவின் சாதனை போற்றப்படும் எனவும் தெரிவித்தார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com