கருப்பாக இருப்பதால் கேலி செய்த கணவர் : ஆத்திரத்தில் ஆணுப்பை வெட்டிய மனைவி

அடுத்த நாள் தனது கணவரை யாரோ சிலர் கொன்றுவிட்டதாக ஊரார் முன்னிலையில் நாடகமாடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
Chhattisgarh woman chops off husband's genitals (Rep)
Chhattisgarh woman chops off husband's genitals (Rep)Twitter
Published on


'சிகப்பு' சருமத்திற்கான மோகம் இன்றும் பல இடங்களில் குறைந்தபாடில்லை. 

ஃபேர்னஸ் க்ரீம்கள் மற்றும் சருமத்தை ஒளிரச் செய்யும் நுட்பங்கள் இன்னும் சந்தையில் இருக்கத்தான் செய்கிறது. இந்த மோகத்தால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள அம்லேஷ்வர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் சோன்வானி. இவரது மனைவி சங்கீதா சோன்வானி.

சங்கீதா கருப்பாக இருப்பது குறித்து அடிக்கடி அவரது கணவர் கேலி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா கோடாரியால் ஆனந்தை வெட்டி கொன்றுள்ளார். 

பின்னர் அடுத்த நாள் தனது கணவரை யாரோ சிலர் கொன்றுவிட்டதாக ஊரார் முன்னிலையில் நாடகமாடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

முதலில் கணவரை யாரோ கொலை செய்ததாகக் கூறிய சங்கீதா, போலீஸ் விசாரணையின்போது முன்னுக்குப் பின் உளறி பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். 

black skin depression  (Rep)
black skin depression (Rep)Twittter

கருப்பாக இருப்பது குறித்து அடிக்கடி கேலி செய்து வந்ததால் வீட்டிலிருந்த கோடரியால் தாக்கி  கணவரைக் கொன்றதாகவும், ஆத்திரத்தில் கணவரின் பிறப்புறுப்பை அந்தப் பெண் வெட்டியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சங்கீதாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com