’கருப்பா அசிங்கமா இருக்க’ - கேலி செய்த கணவரை கோடரியால் தாக்கி கொலை செய்த மனைவி

இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா தனது கணவரை வீட்டில் வைத்திருந்த கோடரியால் தாக்கி சம்பவ இடத்திலேயே கொன்றதாக அதிகாரி கூறினார். கணவரின் பிறப்புறுப்பை அந்தப் பெண் வெட்டியதாகவும் அவர் கூறினார்.
Crime
CrimeCanva
Published on

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவரைக் கோடரியால் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் அவர் தனது கருமையான சரும நிறத்தைப் பற்றி அடிக்கடி கேலி செய்வதால்

மனமுடைந்து இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

அம்லேஷ்வர் கிராமத்தில் தனது கணவர் ஆனந்த் சோன்வானியை (40) கொன்றதாக மனைவி சங்கீதா சோன்வானியை கைது செய்ததாகக் காவல் துறையின் துணைப்பிரிவு அதிகாரி தேவன்ஷ் ரத்தோர் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையின்படி,  ஆனந்த் தனது மனைவியை அசிங்கமானவர் என்றும், அவளது கருமையான சருமம் குறித்து அடிக்கடி கேலி செய்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாகக் கணவன்-மனைவி இடையே கடந்த காலங்களில் பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, இரவில் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சரும நிறம் குறித்தும்  உடல் விமர்சனம் குறித்தும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Crime
”என் கணவர் கோமாவில் இருக்கிறார்” - 18 மாதங்கள் இறந்தவரின் உடலை வீட்டில் வைத்திருந்த மனைவி

இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா தனது கணவரை வீட்டில் வைத்திருந்த கோடரியால் தாக்கி சம்பவ இடத்திலேயே கொன்றதாக அதிகாரி கூறினார். கணவரின் பிறப்புறுப்பை அந்தப் பெண் வெட்டியதாகவும் அவர் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மறுநாள் காலையில் யாரோ தனது கணவரைக் கொன்றதாகக் கூறி கிராம மக்களைத் தவறாக வழிநடத்த முயன்றார். ஆனால் பின்னர் போலீஸ் விசாரணையின் போது குற்றத்தை சங்கீதா செய்ததாக ஒப்புக்கொண்டார் என அதிகாரி கூறியுள்ளார்.

Crime
8 வருட குடும்ப வாழ்க்கையில் விரிசல்: கணவரை ’பெண்’ என கண்டுபிடித்த மனைவி - எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com