டெல்லி கலவரம் : இரு சமூகங்கள் இடையே வன்முறை - என்ன நடந்தது? | விரிவான தகவல்கள்

டெல்லியில் உள்ள ஜஹான்கிர்பூரி என்ற இடத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற அனுமந்த் ஜெயந்தி ஊர்வலத்தின்போது இரு சமூதாய மக்களுக்கு இடையே வன்முறை வெடித்துள்ளது.
டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்Facebook
Published on

டெல்லியில் உள்ள ஜஹான்கிர்பூரி என்ற இடத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற அனுமந்த் ஜெயந்தி ஊர்வலத்தின்போது இரு சமூதாய மக்களுக்கு இடையே வன்முறை வெடித்துள்ளது.

தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக 14 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வன்முறையில் காவல்துறையை சேர்ந்த சிலரும் காயமடைந்துள்ளனர். துணை காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கையில் துப்பாக்கி குண்டு பட்டு காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவரின் உடல் நலம் தற்போது சீராகவுள்ளது.

சம்பவத்தின்போது ஜஹான்கிர்பூரியின் சி ப்ளாக்கில் உள்ள மசூதியில் இருந்த ஷேக் அம்ஜத், ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் சில வன்முறையை தூண்டும் கோஷங்களை எழுப்பியதாகவும், மசூதிக்குள் நுழைந்து காவி கொடியை நட முயற்சி செய்ததாகவும் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜஹான்கிர்பூரியில் இரு சமூக மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாகவும் இதற்கு முன்பு இம்மாதிரியான கலவரத்தை பார்த்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மசூதியை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மசூதியை சுற்றியுள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

50க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக மசூதிக்குள் நுழைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

டெல்லியின் ஜஹான்கிர்பூரி உழைக்கும் மக்களை அதிகம் கொண்ட பகுதியாகும். இங்கு இந்து முஸ்லிம் என இரு சமூக மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய ஷிவ் என்ற வழக்குரைஞர், இந்து, முஸ்லிம் என பாகுபாடின்றி பல தலைமுறையாக நண்பர்களாக இருந்து வருகிறோம். சிலர் மசூதியின் மேல் ஏற முயற்சித்தனர். எனக்கு அதை பார்க்க சங்கடமாக இருந்தது. நேற்று வரை எனது முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்த நான் குடிநீரும் ஷர்பத்தும் வழங்கி கொண்டிருந்தேன். இதுவரை இப்படி நடந்தது இல்லை. வெளியில் இருந்து வந்த சிலர் எங்கள் உறவை குலைக்க பார்க்கின்றனர்.” என்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

“டெல்லியின் ஜஹான்கிர்பூரியில் ஊர்வலத்தில் நடந்த கல்வீச்சு கண்டனத்துக்குரியது. குற்றம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும்,” என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரம்
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்
டெல்லி கலவரம்
வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com