டெல்லி: மெட்ரோவில் முத்தமிட்ட காதல் ஜோடி; இணையத்தில் வலுக்கும் ஆதரவு - என்ன காரணம்?

டெல்லி மெட்ரோவில் ஒரு இளம் ஜோடி உதட்டோடு உதடு முத்தமிட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது
டெல்லி: மெட்ரோவில் முத்தமிட்ட காதல் ஜோடி; இணையத்தில் வலுக்கும் ஆதரவு - என்ன காரணம்?
டெல்லி: மெட்ரோவில் முத்தமிட்ட காதல் ஜோடி; இணையத்தில் வலுக்கும் ஆதரவு - என்ன காரணம்?twitter
Published on

மெட்ரோவில் இளம் காதல் ஜோடி முத்தமிட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனிதர்கள் தங்களுடைய அன்பை வெளிப்படுத்த முத்ததை பகிர்ந்துகொள்கின்றனர். அன்பின் உச்சக்கட்ட வெளிபாடாக முத்தம் இருக்கிறது.

முத்தமிட்டுக் கொள்வதால் நம் உடலில் சில கலோரிகள் கரைகிறது என்றும் அறிவியல் சொல்கிறது.


Kiss
KissTwitter

பொது இடங்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கொஞ்சி முத்தமிடுவதோ, செல்ல பிராணிகளை முத்தமிடுவதோ, ஒரு விதத்தில் flying kiss கொடுப்பது கூட சாதாரணமாக விஷயமாகவே கருதப்படுகிறது

ஆனால், மேற்கத்திய நாடுகளில் இருப்பதுபோல, PDA எனப்படும் பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்தும் public display of affection இந்தியாவில் அவ்வளவாக இல்லை. குறிப்பாக காதலர்கள் முத்தமிட்டுக்கொள்வது

ஆங்காங்கே ஓரிரு இடங்களில் நடக்கும். அப்படி டெல்லி மெட்ரோவில் ஒரு இளம் ஜோடி உதட்டோடு உதடு முத்தமிட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது

டெல்லி: மெட்ரோவில் முத்தமிட்ட காதல் ஜோடி; இணையத்தில் வலுக்கும் ஆதரவு - என்ன காரணம்?
Kiss Day : மனிதர்கள் முத்தமிடுவதற்கு என்ன காரணம்?
Kiss
Kiss Canva

இந்த வீடியோவை ட்விட்டர் பக்கம் ஒன்றில் பகிரப்பட்டு, மிகவும் வெட்கப்படும்படியான செயல், பயணிகளை இந்த ஜோடியின் செயல் அசவுகரியத்தில் ஆழ்த்தியது என பதிவிடப்பட்டிருந்தது.

சிலர் இந்த வீடியோ பதிவிட்டவருக்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்தாலும், பெரும்பாலானோர், அந்த நபருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

வீடியோவில் இடம்பெற்றுள்ள அந்த ஜோடியின் அனுமதியில்லாமல் அவர்களை வீடியோ எடுத்தது தான் வெட்க்கக்கேடான செயல் என தெரிவித்தனர்.

மேலும், பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்தும் இது போன்ற செயல்களை இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்ள பழக வேண்டும் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்

மும்பையில் சாதாரணமாக இது போன்ற காட்சிகளை காணலாம் எனவும், டெல்லி மெட்ரோவில் நடப்பதை ஏன் சர்ச்சையாக்குகிறீர்கள் எனவும் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

மற்றொருவர், ஒருவரின் அனுமதி இல்லாமல், கவனம் இல்லாமல் ஒருவரை படம்பிடித்து பதிவிடுவது ஐபிசி 354 சி பிரிவின்படி தண்டனைக்குறிய குற்றம் எனவும் கமெண்ட் செய்திருந்தார்.

சமீபத்தில் டெல்லி மெட்ரோவில் பிகினி அணிந்துகொண்டு பெண் ஒருவர் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

டெல்லி: மெட்ரோவில் முத்தமிட்ட காதல் ஜோடி; இணையத்தில் வலுக்கும் ஆதரவு - என்ன காரணம்?
மெட்ரோவில் பிகினியுடன் பயணம் செய்த பெண் : வைரலான வீடியோ - என்ன சொல்கிறார் அவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com