KGF 2 பிஜிஎம்மை பயன்படுத்திய காங்கிரஸ் - டுவிட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு எம்.ஆர்.டி. இசை நிறுவனம் பெங்களூரு போலீசில் புகார் அளித்தது.
KGF 2 பிஜிஎம்  பயன்படுத்திய காங்கிரஸ்
KGF 2 பிஜிஎம் பயன்படுத்திய காங்கிரஸ்Twitter
Published on

இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாதயாத்திரை கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் நடைபெற்றது. தற்போது ராகுல்காந்தி தலைமையில் பாதயாத்திரை தெலுங்காவில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் இந்த பாதயாத்திரை தொடர்பான கருத்துக்களை வெளியிட 'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் தனியே டுவிட்டர் கணக்கு காங்கிரஸால் தொடங்கப்பட்டது.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை தொடர்பான வீடியோ, புகைப்படங்கள், அந்த டுவிட்டர் கணக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கர்நாடகாவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணத்தின் போது காங்கிரஸ், பாரத் ஜோடோ யாத்திரை டுவிட்டர் பக்கங்களில் வீடியோ ஒன்று வெளியிட்டது. அதில், கே.ஜி.எப். 2 திரைப்பட பாடலின் இசை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கே.ஜி.எப். 2 பட பாடலின் இசைக்கான காப்புரிமையை எம்.ஆர்.டி. இசை நிறுவனம் பெற்றுள்ளது. அந்த பிஜிஎம்மை காங்கிரஸ் பயன்படுத்த முன் அனுமதி பெறவில்லை என எம்.ஆர்.டி. இசை நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது

மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு எம்.ஆர்.டி. இசை நிறுவனம் பெங்களூரு போலீசில் புகார் அளித்துள்ளது. இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது.

அப்போது, காப்புரிமை பெற்றுள்ள நிறுவனத்திடமிருந்து அனுமதி பெறாமல் அவர்களின் பாடலின் இசையை பயன்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தை சட்ட ரீதியில் எதிர்கொள்வோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

KGF 2 பிஜிஎம்  பயன்படுத்திய காங்கிரஸ்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - சந்திக்கவிருக்கும் 4 முக்கிய சவால்கள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com