மாடுகளை கட்டிப்பிடித்தால் மன அமைதி கிடைக்குமா? - இதுதான் உண்மையாம்

மேற்கத்திய மக்களுக்கு ஒரு மலிவு விலை மனநல மருத்துவராகவே பணியாற்றி வருகின்றன பசுக்கள்.
மாடுகளை கட்டிப்பிடித்தால் மன அமைதி கிடைக்குமா? - ஒரு மருத்துவ பார்வை!
மாடுகளை கட்டிப்பிடித்தால் மன அமைதி கிடைக்குமா? - ஒரு மருத்துவ பார்வை!Twitter
Published on

மன அமைதிக்காகவும், மன அழுத்தம் (Stress) மனச்சோர்வு (Depression) ஆகியவற்றில் இருந்து விடுபடவும் இந்த காலத்தில் மக்கள் பல வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.

அதில் புதிய ட்ரெண்டாக உருவாகியிருப்பது தான் மாடுகளைக் கட்டிப்பிடிப்பது. ஆம் நம் அரசு பிப்ரவரி 14ம் தேதி சொன்ன அதே வழிமுறை தான்.

அரசு மேற்கத்திய கலாச்சாரத்தை தவிர்க்க இந்த வழிமுறையை உபயோகிக்குமாறு கூறியது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இது ஒரு தெரப்பியாக பயன்பட்டு வருகிறது.

மனநலத்தை பாதுகாக்கும் இந்த வழிமுறை நெதர்லாந்தில் இருந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனை koe knuffelen என்று அழைக்கின்றனர்.

இந்த வார்த்தைக்கு மாட்டை கட்டிப்பிடிப்பது என்று பொருள். இதனை மனதுக்கு அமைதியைக் கொண்டுவரும் உள்ளார்ந்த சிகிச்சை முறையாக கருதுகின்றனர்.

மனிதருக்கும் விலங்குக்கும் இருக்கும் பிணைப்பை இது அதிகரிக்கும் என்கின்றனர்.

இந்த செயல்முறை மாட்டுப் பண்ணையை மெல்ல சுற்றிவருவதில் தொடங்குகிறது. பின்னர் ஒரு மாட்டைத் தேர்ந்தெடுத்து அதனுடன் இரண்டு முதல் மூன்று மணிநேரம் அமர்ந்திருப்பர்.

மாடுகளை கட்டிப்பிடித்தால் மன அமைதி கிடைக்குமா? - ஒரு மருத்துவ பார்வை!
பிப்ரவரி 14 : பசுக்களை கட்டிப்பிடிக்க அரசு சொல்வது ஏன்? - விரிவான பின்னணி

பசுவின் மித வெப்பமான உடலும், இதயத்துடிப்பும், பெரிய அளவிலான உடலும் அதனை அணைந்து அமர்ந்திருப்பதை சுகமான அனுபவமாக மாற்றும்.

பசு நம் மீது சாய்ந்தால் அதற்காக வளைந்துகொடுப்பதும், அது நாக்கால் நக்கினால் ஏற்பதும் கூட இனிமையானதாக இருக்கும். இது எல்லாமே சிகிச்சையின் ஒரு பகுதி தான்.

பசுக்களை கட்டிப்பிடிப்பது நம் மகிழ்ச்சி ஹார்மோன்களைத் தூண்டும். இதனால் நமது மன அழுத்தம் குறைக்கப்படும் என நம்புகின்றனர்.

சாதாரணமாக செல்லபிராணிகளைக் கொஞ்சும் போது பெறும் மன நலன்கள் பசு போன்ற பெரிய விலங்கை அணைக்கும் போது அதிகமாக கிடைக்கும் என்கிறார்கள்.

மாடுகளை கட்டிப்பிடித்தால் மன அமைதி கிடைக்குமா? - ஒரு மருத்துவ பார்வை!
Crime Thriller Series பார்ப்பதால் மன அழுத்தம் ஏற்படுமா?- இளைஞர்களை எச்சரிக்கும் ஆய்வு!

டச்சு பிராந்தியங்களில் ஆரம்பித்த இந்த பழக்கம், இயற்கையுடனான மனித உறவை மேம்படுத்துவதாகவும் கிராமப்புற வாழ்க்கையை ஊக்குவிப்பதாகவும் இருக்கிறது. இப்போது ஐரோப்பாவின் பல நாடுகளிலும் அமெரிக்காவிலும் இது அதிகமாக கடைபிடிக்கப்படுகிறது.

மாடுகள் ரிலாக்ஸாக இருப்பதற்கு உதவுகின்றன என அறிவியல் ஆய்வுகளும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் கழுத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மசாஜ் செய்தால் மிகவும் லாவகமாக நாம் அணைக்க அனுமதிக்கும் என்கின்றனர்.

மேற்கத்திய மக்களுக்கு ஒரு மலிவு விலை மனநல மருத்துவராகவே பணியாற்றி வருகின்றன பசுக்கள். அரசு சொல்வது போல நாமும் ட்ரை பண்ணலாமே!

மாடுகளை கட்டிப்பிடித்தால் மன அமைதி கிடைக்குமா? - ஒரு மருத்துவ பார்வை!
மனிதர்களின் மன அழுத்தத்தை நாய்கள் உணர முடியுமா? ஆய்வு என்ன சொல்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com