டெல்லியில் கொசுவை விரட்டுவதற்காக கொளுத்தி வைத்திருந்த கொசுவர்த்திச் சுருளால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள சாஸ்திரி பார்க் பகுதியில் காலை 8.52 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் வீட்டிற்கு விரைந்தன.
இந்த சம்பவம் குறித்து, டெல்லி வடக்கு மாவட்ட டிசிபி ஜாய் ட்ரிகி கூறும்போது,
"வடக்கு டெல்லியில் இருக்கும், சாஸ்திரி பார்க் காவல் நிலையத்திற்கு இன்று காலையில் ஒரு அழைப்பு வந்தது. அதில், மச்சி மார்கெட் அருகில் உள்ள மஸார் வாலா சாலையில் ஒரு வீட்டில் தீப்பிடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் கொசுவர்த்திச் சுருள் கொளுத்தி வைத்திருக்கின்றனர். அந்த கொசுவர்த்தி மெத்தையில் விழுந்து தீ பிடித்துள்ளது.
அதனால் உண்டான நச்சுப்புகையை இரவு முழுக்க சுவாசித்ததால் அதில் 6 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் மொத்தம் 9 பேர் பாதிக்கப்பட்டனர். இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் ஒருவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
நான்கு ஆண்கள் ஒரு குழந்தை, ஒரு பெண் என ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். கொசுவர்த்தி சுருளால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust