டெல்லி விமான நிலையம் : துபாயை பின்னுக்கு தள்ளிய இந்தியா - ஓர் சாதனை

மார்ச் மாதம் உலகிலேயே இரண்டாவது பிசியான விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் இருந்துள்ளது என சர்வதேச விமான பயணங்கள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் ஓஏஜி என்னும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி விமான நிலையம்
டெல்லி விமான நிலையம்NewsSense
Published on

மிகவும் பரபரப்புடன் இயங்கிய விமான நிலையங்களில், இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம். இது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமானச் சேவை இரண்டையும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உலகிலேயே பிசியான விமான நிலையமாக கருதப்படும் துபாய் விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளது டெல்லி விமான நிலையம்

கடந்த பிப்ரவரி மாதம் மூன்றாம் இடத்திலிருந்த டெல்லி விமான நிலையம், அதிக பயணிகளை கையாண்டதில், தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டாம் இடத்திலிருந்த துபாய் விமான நிலையம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

சரி முதல் இடத்தை பிடித்த விமான நிலையம் எது என்றுத் தெரியுமா?

அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஹார்ட்ஸ்ஃபீல்ட் ஜாக்சன் சர்வதேச விமான நிலையம் முதல் இடத்திலுள்ளது. இது தொடர்ந்து தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளில் டில்லி விமான நிலையத்திலிருந்து செல்வதற்கும் வருவதற்கும் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளின் அடிப்படையில் ஒபிசியல் ஏர்லைன் கைட்(Official Airline Guide-OAG) எனப்படும் ஓஏஜி இந்த தரவுகளை கணக்கிட்டுள்ளது.

Atlanta Airport
Atlanta Airportஆதிரை

இதே டெல்லி விமான நிலையம் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம், அதாவது கொரோனா பரவலுக்கு முன், 23ஆவது இடத்திலிருந்தது. இப்போது மார்ச் மாதத்தில் 36 லட்சம் பயணிகள் டெல்லி விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்

இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் லண்டனின் ஹீட்த்ரூ விமான நிலையம் உள்ளது. உலகளவில் கொரோனா பெருந்தொற்றுக்கான தடயங்கள் மெல்ல மங்கி வரும் சூழலில் பயணங்களும் அதிகரித்துள்ளன.

அந்த வகையில் இந்தியாவின் டெல்லி விமான நிலையமும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. எனவே இந்த தரவுகள் விமானப் போக்குவரத்துத் துறையும் சுற்றுலாத்துறையும் மெல்ல மீண்டு வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதாகவே உள்ளது.

Air traffic normalised
Air traffic normalisedஆதிரை

இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தின் தரவுகளின்படி, டெல்லி விமான நிலையத்தில் பிப்ரவரி மாதம் 7 லட்சத்து 22 ஆயிரத்து 431ஆக இருந்த பயணிகளின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 9 லட்சத்து 83 ஆயிரத்து 728ஆக இருந்துள்ளது. மார்ச் 27 தேதி முதல் அனைத்து சர்வதேச விமானச் சேவைகளும் மீண்டும் தொடங்கியதால் ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

விகடன் வாசகர்களுக்காக பிற தளங்களில் உள்ள முக்கிய செய்திகளை வழங்கும் முயற்சி இது. | #NewsSenseTNContent

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com