மெட்ரோ ரயில் நிலையத்தியில் ஒரு நபர் மிகவும் வித்தியாசமாக நடமாடியிருக்கிறார்.
அவரது உடையை சக பயணிகள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
வெள்ளை பனியனும் இடுப்பில் மஞ்சள் துண்டும் கட்டிக்கொண்டு அந்த நபர் கேசுவலாக நடந்துவரும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வரும் நிலையில் எக்கச்சக்க லைக்குகளையும் கமன்ட்களையும் பெற்றிருக்கிறது.
ஸ்டைலாக நடக்க வேண்டும் என்பதற்காக அந்த நபர் நடக்கும் போது தனது தலைமுடியை பல இடங்களில் சரிசெய்வதை வீடியோவில் காண முடிந்தது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "என் வீட்டில் தண்ணீர் காலி, இன்று ஆபிஸில் குளிக்கிறேன்" எனத் தலைப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவில் ஒருவர் இந்த துணிவு உங்களை முன்னேற்றும் சகோ எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோவுக்கு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளும் 1200க்கும் மேற்பட்ட எதிர்கருத்துகளும் கிடைத்துள்ளன.
இந்த வீடியோவுக்குப் பிறகு அந்த பக்கத்தில் behind the scene என மற்றொரு வீடியோவையும் பகிர்ந்திருக்கின்றனர்.
அதில் அந்த நபர் துண்டைக் கழட்டுவதும் உள்ளே அவர் கால்சட்டை அணிந்திருப்பதும் தெரிகிறது.
இந்த வீடியோவை அவர் திட்டமிட்டே லைக்குகளுக்காக எடுத்துள்ளார் எனப் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும், பொது இடங்களில் இந்த கோமாளித்தனங்களை நிகழ்த்த வேண்டிய அவசியம் என்ன என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust