மகளிர் மட்டும் : பெண்களுக்காக கட்டப்படும் 250 பிங்க் பார்க்குகள் - எங்கே?

இந்த பார்க்குகளில் சிசிடிவி கேமராக்கள், கழிப்பறைகள், சுவர்களில் கிராஃபிட்டி, ஜிம் வசதிகள் இந்த பார்கில் இருக்குமாம்.
மகளிர் மட்டும் : பெண்களுக்காக கட்டப்படும் 250 பிங்க் பார்க்குகள் - எங்கே?
மகளிர் மட்டும் : பெண்களுக்காக கட்டப்படும் 250 பிங்க் பார்க்குகள் - எங்கே?ட்விட்டர்
Published on

டெல்லியில் பெண்களுக்கு மட்டுமேயான பூங்காக்கள் திறக்கப்படவுள்ளன. நகரில் பெண்களுக்கு வசதியான இடங்களை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் இந்த பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன எனக் கூறப்பட்டுள்ளது.

டெல்லி முனிசிபாலில் இந்த பார்க்குகளை அமைக்க சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. மகளிர் மட்டும் பிங்க் பார்க் என இந்த பார்க்குகள் அரியப்படும். 

டெல்லி துணை மேயர் அலி முகமது இக்பால், “பெண்களுக்கு பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு சௌகரியமான இடத்தை நகரில் உருவாக்கித்தரும் நோக்கில் பிங்க் பார்க்குகள் அமைக்கப்படுகின்றன” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடனான சந்திப்பில் இந்த புதிய சிந்தனை தோன்றியதாகவும் கூறியிருக்கிறார். டெல்லியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது ஒரு பிங்க் பார்க் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனராம். 

டெல்லியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. பிங்க் பார்க்குளில் பெண்களும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்களாம். 

சிசிடிவி கேமராக்கள், கழிப்பறைகள், சுவர்களில் கிராஃபிட்டி, ஜிம் வசதிகள் இந்த பார்கில் இருக்குமாம்.

மகளிர் மட்டும் : பெண்களுக்காக கட்டப்படும் 250 பிங்க் பார்க்குகள் - எங்கே?
Indian Railway: பெண்கள் டிக்கெட் இல்லாமலும் பயணிக்க முடியுமா? இந்த ரயில்வே விதி தெரியுமா?

இதனால் பெண்களுக்கு சௌகரியமானதாகவும் பயனுள்ளதாகவும் பிங்க் பார்க்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

டெல்லியில் இப்போது கிட்டத்தட்ட 15,000 பார்க்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சில வரலாற்று பூங்காக்களையும் டெல்லி அரசு நிர்வகித்து வருகிறது. 

பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள், பேருந்துகள் வரிசையில் பார்க்களும் உருவாகின்றன. இது நம் ஊரிலும் அமல்படுத்தப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

மகளிர் மட்டும் : பெண்களுக்காக கட்டப்படும் 250 பிங்க் பார்க்குகள் - எங்கே?
”பிரதமர் மோடி மீது புகார் கொடுக்கணும்” பாகிஸ்தான் நடிகை ட்வீட் - டெல்லி போலீஸ் பதில் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com