பஞ்சாப்பின் ஹோசியார்பூர் பகுதியைச் சேர்ந்த இவர், அரியானாவின் குருகிராமில் பணிபுரிந்து வந்துள்ளார். சமீபத்தில் வேலையிலிருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மெட்ரோ ரயில் நிலையத்திற்குத் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் வந்த அவர், அக்ஷர்தம் மெட்ரோ ரயில் நிலையத்தின் புளூ லைன் பிரிவில் கட்டிடத்தின் மேல் பகுதிக்கு நின்று தற்கொலைக்கு முயன்றார். இதனை பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் கவனித்து, இளம்பெண்ணைக் கீழே இறங்கிப்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் அந்த பெண், அவர்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவில்லை.
இதனையடுத்து அவரை காப்பாற்று முயற்சியில், சி.ஐ.எஸ்.எப். குழு ஒன்று உடனடியாக தரை தளத்திற்குச் சென்று கனமான போர்வைகள் விரித்துப் பாதுகாப்பு வலை அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினர்.
சொல்லிக்கொண்டே இருக்கும் போது அந்த பெண் மெட்ரோ ரயில் நிலைய கட்டிடத்திலிருந்து கீழே குதித்து விட்டார். அவர் பாதுகாப்பு வலையில் விழுந்தபோதும் படுகாயமடைந்தார். சுயநினைவுடன் இருந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அப்பெண் பலனின்றி நேற்று மாலை உயிரிழந்து உள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com