நிஜ மின்னல் முரளி : இணையத்தில் வைரலாகும் ரயிவே ஸ்டேஷன் தாத்தா! - Video

மின்னல் வேகத்தில் டிக்கெட் எடுத்துக்கொடுக்கும் தாத்தா இணையத்தில் கவனம் பெற்றுள்ளார். தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் அவர் 15 வினாடிகளில் 3 பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துவிடுகிறார்.
ரயில் நிலையம்
ரயில் நிலையம்Twitter
Published on

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். நாம் நமது வேலைக்கோ ஊருக்கோ அவசர அவசரமாக சென்றால் கடைசி நேரத்தில் டிக்கெட் எடுக்க தாமதமாகும் போது பதட்டம் அதிகமாகும். ஆனால் இந்த ஸ்டேஷனில் டிக்கெட் எடுக்க தாமதமாகிறது என்று எந்த பயணியும் சொல்லமுடியாது என சவால் விடுகிறார் இந்த தாத்தா.

ரயில் நிலையங்களில் இருக்கும் டச் ஸ்கிரீன் டிக்கெட் வெண்டிங் மிஷினில் டிக்கெட் போடும் வேலையை செய்து வரும் அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க டிக்கெட் இயந்திரமே திணறுகிறது.

அவர் மின்னல் வேகத்தில் டிக்கெட் எடுத்துக்கொடுக்க பயணிகள் மகிழ்ச்சியாக பெற்றுச் செல்கின்றனர்.

பயணிகளிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டு, பணத்தை வாங்கி டிக்கெட் இயந்திரத்தில் பதிவிட்டு அச்சடிக்கப்பட்டு வரும் டிக்கெட்டை வாங்கிக் கொடுக்கும் வேலையை அவர் சில வினாடிகளிலேயே முடித்துவிடுவது ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் அவர் 15 வினாடிகளில் 3 பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துவிடுகிறார்.

"அவரது அனுபவத்தினால் மிகத் துல்லியமாக இதனைச் செய்கிறார். இதனால் பலரது நேரத்தை மிச்சப்படுத்துகிறார்"

"மனிதனும் இயந்திரமும் சேர்ந்து வேலை செய்யும் போது இந்த மேஜிக் நடக்கிறது"

"என்ன தான் இயந்திரங்களை பயன்படுத்தினாலும் மனிதர்களுக்கு இணையாக இருக்க முடியாது. இதற்கு உதாரணம் இந்த வீடியோதான்"

என நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

"எங்க இருந்தாலும் செல்லத்த சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு தூக்கிட்டு வாங்கடா" என்பது தான் சென்னை வாசிகளின் எண்ணமாக இருக்கக்கூடும்!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com