
பிரதமர் நரேந்திர மோடி -ஐ கிண்டல் செய்தார்களா அந்த சிறுவர்கள்? - அண்ணாமலை புகார்
Modi
பிரதமர் மோடியின் நடவடிக்கைகளைக் கேலி, கிண்டல் செய்து நிகழ்ச்சி ஒளிபரப்பிய தனியார் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Annamalai
NewsSense
தமிழ் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான பொழுதுபோக்கு சேனலில் குழந்தைகள் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது.
அதில், புலிகேசி மன்னர் போன்ற வேடத்தில் ஒரு குழந்தையும், மங்குனி அமைச்சர் வேடத்தில் ஒரு குழந்தையும் நடித்திருந்தனர்.
இரண்டு குழந்தைகளும் பிரதமர் மோடியின் கருப்பு பண நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளை விமர்சித்து வசனங்களை பேசியிருந்தன. இந்த காட்சிகள் நேற்றிலிருந்து இணையத்தில் வைரலானது
இது பிரதமர் மோடியையும், அமைச்சர் அமித்ஷாவையும் குறிப்பிடுவது போல உள்ளது என பா.ஜ.கவினர் புகார் தெரிவித்து இருந்தனர்.
இப்படியான சூழலில் இந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி -ஐ கிண்டல் செய்தார்களா அந்த சிறுவர்கள்?
BJP
மோடி
NewsSense
அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பைக் குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்!அவருக்கு என் நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான சூழலில் பா.ஜ.கவின் இந்த நடவடிக்கையி பா.ஜ.கவினர் எதிர்த்துள்ளனர்.
ஒரு நகைச்சுவையை அதன் பொருளில் கூட பா.ஜ.ஜவால் புரிந்து கொள்ள முடியாதா என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.